ஐந்து ஆண்டுகளுக்கு முன் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரை அறிமுகப்படுத்திய பின் பல்வேறு சாதனைக் கற்களைக் கடந்துள்ளது. விரைவில் இன்னும் ஒரு சாதனை மகுடத்தினை அடைய உள்ளது. தன் இன்டர்நெட் பிரவுசர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை இருநூறு கோடியைத் தாண்ட உள்ளது. இதனைக் கண்காணித்து அறிவிக்க இணைய தளம் ஒன்றினை மொஸில்லா திறக்க இருக்கிறது. இதன் முகவரி Onebillionplusyou.com என்று அமையும்.
இதற்கிடையே ட்விட்டர் தளத்தில் பயர்பாக்ஸ் டவுண்லோட் செய்வதனை ஒவ்வொரு விநாடியும் கணக்கெடுத்து எத்தனை டவுண்லோட் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று காட்டும் வகையில் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு விநாடியும் சராசரியாக 20 பேர் வரை டவுண்லோட் செய்வார்கள் என மொஸில்லா எதிர்பார்க்கிறது. இதை எழுதும் நாளில் இருந்து இரண்டொரு நாளில் இந்த 200 கோடி எண்ணிக்கை எட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை பயர்பாக்ஸ்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அல்ல என்றாலும், இந்த பிரவுசர் மீது நம்பிக்கை கொண்டு அதனைச் சோதித்துப் பார்க்க விரும்புவர்களின் விருப்பத்தினைத் தெரிவிப்பதாக அமைகிறது.
18 மாதங்களுக்கு முன் தான் (பிப்ரவரி 22, 2008) பயர்பாக்ஸ் டவுண்லோட் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் 150 கோடிப் பேர் டவுண்லோட் செய்கிறார்கள் என்பது இந்த பிரவுசரின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு ஒப்புதல் என்று தான் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியினை எழுதுகையில் கிடைத்த எண்ணிக்கை தகவல் இதோ தரப்படுகிறது. தளத்தின்முகவரி, நாள், நேரம், டவுண்லோட் எண்ணிக்கை இங்கு காட்டப்படுகிறது.
http://twitter.com/FirefoxCounter 1,024,106,599 downloads at 10.9 per second on 20090823 07:24 UTC
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment