ரூ. 1 கோடியே 83 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு
லண்டன், ஆக. 31-
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த 1980-ம் ஆண்டு ஒரு ஆடு ரூ. 1 கோடியே 17 லட்சத்துக்கு விற்கப்பட்டது. கடந்த 24 ஆண்டுக்கும் மேலாக அது உடைக்க முடியாத உலக சாதனையாக இருந்தது.
கடந்த வியாழக்கிழமை ஸ்காட்டிஸ் நேஷனல் டெக்சல் சந்தையில் ஒரு ஆடு பரபரப்பாக ஏலம் விடப்பட்டது. டெவரன்வாலே என்றழைக்கப்பட்ட அந்த ஆட்டை வாங்க கடும் போட்டி நிலவியது.
இறுதியில் கெயர்னஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த ஆட்டை வாங்கினார். உலக சந்தையில் ஒரு ஆடு இவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்த ஆடு விற்பனை மூலம் அதன் உரிமையாளருக்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. ஒரு ஆடு இந்த அளவுக்கு விலை போனது டெக்சல் பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment