ஜம்மு: இளம் பெண்ணை கடத்த வந்த பயங்கரவாதிகளை அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டு ஒட. ஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்கள் வீரம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரசூரி மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு குடும்பத்தினருடன் இருந்த இளம் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஆனால் பெற்றோர்கள் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பெற்றோர்களை அடித்து தாக்கினர்.
தலைதெறிக்க ஓட்டம் : மகனுக்கு கோடாரியால் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து கொதித்துப்போன இளம்பெண் ரக்சனா கவுசார் ஒரு பயங்கரவாதி மீது பாய்ந்து அவரை சுவர் மீது தள்ளி விட்டாள். தொடர்ந்து அந்த பயங்கரவாதியின் ஏ.கே., 47 ரக துப்பாக்கியை பிடுங்கினார். உடனடியாக பயங்கரவாதிகளை நோக்கி சுட்டார். இதில் ஒரு பயங்கரவாதி இறந்தார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓடினர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எப்போதும் ஆபத்து வரலாம் : ஒரு இளம் பெண் பயங்கராவதிகளிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி விரட்டியது குறித்து அப்பகுதி மக்கள் இந்த பெண்ணை பாராட்டினர். இருப்பினும் இந்த பயங்கரவாதிகளால் எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம். எனவே அருகில் உள்ள போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த பெண்ணின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
கிராம பாதுகாப்பு கமிட்டியின் பயிற்சி : இந்தசம்பவம் குறித்து இளம்பெண் ரக்சனா கூறியதாவது; பயங்கராவதியிடம் பறித்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டேன். எனக்கு கிராம பாதுகாப்பு கமிட்டியினர் கொடுத்த துப்பாக்கி சுடும் பயிற்சி இந்நேரத்தில் உதவியது. இது தான் என்னையும், என் குடும்பத்தினரையும் காப்பாற்றியது என்றார்.
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment