முப்பத்தி மூன்று தொழிலாளர்களின் வேலைநீக்க உத்தரவில் கையெªழுத்திடப்போய், கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார், பிரபல 'பிரிக்கால்' நிறுவனத்தின் மனிதவளத்துறை துணைத் தலைவரான ராய் ஜார்ஜ்! மனித வள மேம்பாட்டுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்டவர் ராய் ஜார்ஜ். கொல்கத்தாவில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் படித்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் மனிதவளத் துறைக்கான 2006-ம் ஆண்டு விருது பெற்றவர். பல கம்பெனிகள் இவரை மனிதவள துறைத் தலைவராக பணி யாற்றச் சொல்லித் தேடிவந்தன. காரணம், நிர்வாகம்-தொழிலாளர் இடையே இவர் கடைப்பிடிக்கும் மென்மையான அணுகுமுறை. ராய் ஜார்ஜுக்கு மனதில் தோன்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதற்காக http://royjgeorge.blogspot.comஎன்ற பிளாக் ஆரம்பித்து எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் தொடர்புடைய முழுத் தகவலும் அந்த பிளாக்கில் இருக்கிறது. அவர் கடைசியாக செப்டம்பர் ஆறாம் தேதி பதிவு செய்த கருத்தின் தலைப் புகள்.... இவை: 'வாழ்க்கையின் நோக்கம்!', 'திடீர் தீவிரவாதத்தால் எந்தப் பயனும் இல்லை!' கொலை செய்யப்பட்ட ராய் ஜார்ஜ் சில மாதங்களுக்கு முன்புதான் பிரிக்கால் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படித்தவர். கேரளாவில் டிரேட் யூனியனிசம்தான் தொழில்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கொதிக்கும் இளைஞர்களில் ஒருவராக வளர்ந்தார் ராய் ஜார்ஜ். படித்து விட்டு சத்யம் தியேட்டர்ஸ், ஐ ஸ்டீல் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்தார். 'பிரிக்காலில் இருக்கும் சிக்கலான நிலைமை எனக்கு ஒரு சவால். அதில் ஜெயித்துக் காட்டுகிறேன்' என்று சொடக்கு போட்டுவிட்டுத்தான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டாராம். நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசுவாராம் ராய் ஜார்ஜ். இதற்கு முன்பு ஹெச்.ஆர். பொறுப்பில் இருந்த கர்னல், தொழிலாளர் பிரச்னையை சரிசெய்ய முடியாமல் வேலையை விட்டுப் போய்விட, புதிதாக வந்தவரோ நிர்வாகத்தின் ஈகோவுக்கும் தொழிலாளர்களின் உணர்ச்சிவேகத்துக்கும் நடுவே மாட்டி பலிகடா ஆனதுதான் மிச்சம். |
source:vikatan |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment