Tuesday, September 22, 2009

தற்கொலை செய்யும் தாவரங்கள்




விண்வெளியில் ஜப்பான் புரட்சி


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஜரோப்பிய நாடுகள் அடங்கிய 16 நாடுகள் கூட்டமைப்பு விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி உள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் ஜப்பானின் ஆய்வு மையமும் அடங்கி இருக்கிறது. இந்த ஆய்வகம் கிப்போ என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் கிப்போ ஆய்வு மையம் பூமியில் இருந்து 125 மைல் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய் வகம் தற்போது பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு வசதிகள், நுண்ணோக்கிகள் மற்றும் அதிநவீன கருவிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கு பேட்டரிகளுக்கு பதிலாக சூரிய ஒளியை பயன்படுத்திக் கொள்ளும் சோலார் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நவீன ஏற்பாடுகளுக்கு பிறகு இதன் பயணவேகம் 125 ஆயிரம் மைல்களாக அதிகரித்துள்ளது.

கறிக்கோழி இறகிலிருந்து புதிய பயோடீசல்

டீசல், பெட்ரோலுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் மாற்று எரிபொருள் பயோடீசல். காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. தற்போது கறிக்கோழி, வாத்துக்களின் இறகுகளை பயன்படுத்தி புதிய வகை பயோடீசலை தயாரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அமெரிக்காவின் ரெனோ நகரில் உள்ள நெவாடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரசாயனம் மற்றும் உலோக வியல் என்ஜினியரிங் மாணவர்கள் இந்த புதுமையான முறையை கண்டுபிடித்துள்ளனர். கறிக்கோழிகள் மற்றும் வாத்துக்களை இறைச்சியாக பயன்படுத்தும்போது இறகுகள் மற்றும் சில பாகங்கள் கழிக்கப்படுகிறது. இவற்றில் 11 சதவீத அளவில் கொழுப்பு இருப்பது தெரிய வந்தது. இந்தக் கழிவுகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து தரமான பயோடீசலாக மாற்றுகிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு வாளி அளவில் உள்ள இறகுகளிலிருந்து ஒரு துளி பயோடீசல்தான் தயாரிக்க முடியும்.

எம்ப்ராய்னிக் ஸ்டெம்செல்லில் உருவான எலி

எம்ப்ராய்னிக் ஸ்டெம்செல் தொழில்நுட்பம் என்பது ஏதேனும் ஒரு செல்லை புதிய முறை யில் மாற்றி அமைத்து ஸ்டெம் செல்லைப் போல அதிக திறனுடைய செல்லை உற்பத்தி செய்ய முடியும். இந்த செல்களை ஸ்டெம் செல்லைப் போல எல்லாவித உறுப்புகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்த புதிய தொழில்நுட்ப முறையில் சீன விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு எலியை உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர். முதிர்ந்த எலியினுடைய தோலில் உள்ள "ஐபிஎஸ்' செல் எனப்படும் குறிப்பிட்ட செல்களை எடுத்து எம்ப்ராய்னிக் முறையில் மாற்றி அமைக்கப்பட்டு இந்த எலி உருவாக் கப்பட்டு உள்ளது. எந்தவித நோய்களும் தாக்காத வகையில் எதிர்ப்புத் தன்மையைப் புகுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது இந்த எலியின் சிறப்பம்சமாகும். இதனால் இந்த எலி நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழும் என்று இதை உருவாக்கிய விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்யும் தாவரங்கள்

தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார் கள் ஆய்வாளர்கள். அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்தி விடுகிறது. இதுவரை இதுபோன்ற செயல்களுக்கு வெப்பமே காரணம் என்று தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால் தாவரங்கள் தங்கள் உடலின் ஒரு பாகத்தை செயலிழக்கச் செய்துவிட்டாலும் அதன் மையப் பகுதி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தற்கொலை நிகழ்வு அதன் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்து செல்ல முடியாத காரணத்தால் உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு திட்டமே ஆகும். இந்த தற்கொலை சுபாவம், இலையுதிர் காலத்தில் தனது இலைகளை உதிர்த்துவிட்டு சாதகமான சூழலுக்கு காத் திருக்கும் அந்த மாற்றத்தைப் போன்றதுதான் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 


--

source:nakkheeran

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails