மெல்போர்ன், செப். 7-
பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார். கடந்த வாரம் அவரது உடல் கலிபோர்னியாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைக்கேல் ஜாக்சன் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் போது கைஉறை அணிவதை வழக்கத்தில் வைத்திருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்திய போது வைரக்கற்கள் பதித்த ஒரு வெள்ளை நிற கை உறையை அணிந்திருந்தார்.
இசை நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அதை பில் ஹிப்பில் என்பவரிடம் கொடுத்துச் சென்றார். பில் அந்த கை உறையை மைக்கேல் ஜாக்சன் நினைவாக வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பில் மரணம் அடைந்தார்.
பில் தாயார் அந்த கை உறையை தன் பொறுப்பில் வைத்திருந்தார். மைக்கேல் ஜாக்சன் திடீரென மரணம் அடைந்ததும் பில் தாயார் அந்த கை உறையை ஏலம் விட தீர்மானித்தார்.
ஆஸ்திரேலியாவில் நேற்று மைக்கேல் ஜாக்சனின் அந்த கை உறை ஏலம் விடப்பட்டது. 25 லட்சம் ரூபாய்க்கு அந்த கை உறையை ஒரு தொழில் அதிபர் ஏலம் எடுத்தார்.
எதிர்பார்த்ததை விட 2 மடங்கு கை உறை ஏலம் போனதாக தெரியவந்துள்ளது.
source:maalaimalar
No comments:
Post a Comment