"ஈரானை தாக்குபவரின் கைகளை துண்டிப்போம்" அதிபர் அகமதின்ஜாத் எச்சரிக்கை
தெக்கான், செப்.23-
ஈரான்-ஈராக் இடையே நடந்த போர் 1980-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையொட்டி நடந்த ஆண்டு விழாவில் ஈரான் நாட்டு அதிபர் முகமது அகமதின்ஜாத் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஐக்கிய அரபு பகுதியில் இருந்து அமெரிக்கா தலைமையிலான படைகள் வெளியேற வேண்டும். ஈரான் தற்போது வலிமையாகவும், அனுபவத்திறமை வாய்ந்த நாடாகவும் திகழ்கிறது.
எந்த ஒரு சக்தியாலும் ஈரானில் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. நம்மீது (ஈரான்) யாரும் தாக்குதல் நடத்தினால் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தால் கூட அவர்களின் கைகளை துண்டிப்போம்.
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
source:maal;aimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment