இரண்டாம் உலகமகாயுத்தத்தின் 70 ஆண்டு நினைவு, பல உணர்ச்சிகரமான ஞாபகங்களுடன் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதனையொட்டி, அந்த யுத்தத்தின் போது ஹிட்லரின் நாசிப்படைகளிடமிருந்து, எப்படி குறிப்பிட்ட சில யூதச்சிறுவர்களை, ஜேர்மனியர் ஒருவர் புகையிரதத்தின் மூலம் காப்பாப்பாற்றினார் என்பதனை எமது செய்திப்பார்வையில் தெரிவித்திருந்தோம்! தற்போது, ஹிட்லர் தோல்வியின் விளிம்பில் இருந்த போது, அவருடன் கூடவே இருந்து, இன்றுவரை இன்னமும் உயிர் பிழைத்திருக்கும் இறுதிப்படை வீரரினை பற்றிய தகவல்களை தருகிறோம்.
ரோச்சஸ் மிஸ்ச் (Rochus Misch), எனும் இவர் 1945 ஏப்ரல் - மே காலப்பகுதியில் சுமார் 12 நாட்கள், ஹிட்லருடன் அருகிலேயே இருந்து, ஹிட்லர் இறுதியாக தங்கியிருந்த பதுங்குகுழிகளில், பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருந்துள்ளார். ஹிட்லரின் பிரத்தியேக படைக்குழுவின், செய்தி தூதுவர், மெய் பாதுகாப்பாளர், தொலைபேசி இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்து வந்த இவர் ஹிட்லரின் படைகள் அனைத்தும் தோல்வியடைந்திருந்த வேளை, ஹிட்லர் இருக்கும் இடத்தினையும் எதிரிகள் கண்டு பிடித்து மிக அருகாமையில் நெருங்கிக்கொண்டிருந்த போது, எவ்வாறு,ஜேர்மனியின், நாசிப்படைகளின் முக்கிய தளபதிகளும், ஹிட்லரும் தம்மை மரணப்படுத்திக்கொண்டார்கள் என்பதனை, தனது அனுபவங்கள் வழியே வெளிக்கொணருகிறார், பிபிசி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில்! ஹிட்லர், தனது மரணத்திற்கு மிக அருகாமையில் இருந்த போதே, மிஸ்ச்சினை சந்தித்திருக்கிறார். மிஸ்ச் ஹிட்லரினை சந்தித்த அனுபவத்தினை விளக்கும் போது, ஹிட்லரின் அறைக்கு தான் நுழைந்த வேளை, கதவின் பின்னால் இருந்து ஹிட்லர் வெளிப்பட்டதும், அவருடைய தங்கையிடம் இக்கடிதத்தினை கொடுக்கும் படி, கூறி அவருக்கே உரிய பாணியில் தலை அசைத்ததும், பின்னர் தளபதிகள் ஒவ்வொருவரும், தற்கொலை செய்துவிட, ஹிட்லரின் தலை மேசையில் சாய்ந்த வாறு இருக்க, அவர் எவ்வாறு அமர்ந்திருந்தார் என்பதனை கண்முன் காட்சிகளாக உணர்ச்சிபூர்வமாக விளக்குகிறார் இவர். ஹிட்லரின் மருத்துவர்கள் இறுதியாக, அவருடைய பிள்ளைகளுக்கு, இனிப்புச்சுவை உடைய குடிபானத்தினை கொடுத்து, அவர்களையும் மரணமடைய செய்வது வரை இவர் கூறிய அனைத்து விடயங்களும், ஹிட்லரின் மரணம் பற்றி இது நாள் வரை உலகில் நிலவி வரும் சர்ச்சைகளினை தீர்க்க, வலுவான புதிய ஆதாரத்தினை தருவதாக அமைந்திருக்கிறது. |
No comments:
Post a Comment