கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்!
கம்ப்யூட்டருக்குள் டேட்டா அல்லது கட்டளைகளை உள்ளீடு செய்வதற்கு நமக்கு உதவிடும் திறன் கொண்ட இரண்டு சாதனங்கள் கீ போர்டும் மவுஸும். இதன் பயன்பாட்டில் பலவகைகள் உள்ளன. இவை இரண்டினைப் பயன்படுத்தும் வழிகளை எந்த அளவிற்கு தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் திறமை கொண்டவர்களாக உயரலாம். இவற்றை இயக்கும் சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.
இந்த இரண்டில் நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று, நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில்'leftclicking' : எனக் கூறுகின்றனர். ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக்குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.
இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், தேவையான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும். ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும்.
டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம். வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை: – Open:: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்; Cut: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு.
Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்குவழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். Delete: : நிரந்தரமாக நீக்கிட; Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர மற்றும் Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது.
மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது.
கீ போர்டு: கம்ப்யூட்டரை நம் விருப்பத்திற்கு செயல்பட வைத்திட நமக்கு உதவும் சாதனம் கீ போர்டு. இதன குவெர்ட்டி கீ போர்டு என அழைக்கின்றனர். எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் கீகளில் முதல் வரிசையில் ஆங்கில எழுத்துக்களான QWERTY வரிசையாக இருப்பதால் இதனை இவ்வாறு அழைக்கின்றனர். இதுவே ஆங்கில டைப்ரைட்டிங் கீ போர்டிலும் இருந்தாலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கென இதில் கூடுதல் கீகளும் செயல்பாடுகளும் உள்ளன. கீ போர்டில் அதி முக்கிய கீ என்டர் கீ ஆகும்.
இதுதான் ஒரு செயலை மேற்கொள்ள இறுதியாகக் கம்ப்யூட்டருக்கு ஆணையிடும் கீ ஆகும். ஷிப்ட் மற்றும் கேப்ஸ் லாக் கீகள் ஆங்கில எழுத்துக்களில் பெரிய (கேபிடல்) எழுத்துக்களைத் தருகின்றன. அதே போல எழுத்துக்களுக்கு மேலாக உள்ள நம்பர் கீகளில் மேலாக பதியப்பட்டிருக்கும் சிறப்பு அடையாளங்களை ஷிப்ட் கீ அழுத்திப் பெறலாம். இந்த கீ தொகுதிகளுக்கு வலது புறம் சில சிறப்பு பயன்பாடுகளுக்கான கீ தொகுப்பினைப் பார்க்கலாம். இதில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ மானிட்டரில் இருப்பதனை அப்படியே படமாகக் காப்பி செய்திட உதவுகிறது. காப்பி செய்ததனைப் படங்களைக் கையாளும் புரோகிராம் ஒன்றில் ஒட்டி பைலாக சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
திரையில் கர்சரைக் கொண்டு செல்ல பேஜ் அப், பேஜ் டவுண், எண்ட், ஹோம் என்ற கீகள் உதவும். இன்ஸெர்ட் கீ டைப் செய்வதனை இடையே புகுத்த உதவும். கீழே இருக்கும் ஆரோ கீகள் ஆரோவின் தன்மைக்கேற்றபடி கர்சரை நகர்த்தும். இந்த கீ தொகுதிகளுக்கு அடுத்தபடியாக எண்களுக்கான கீ பேட் உள்ளது. ஒவ்வொரு எண் கீயிலும் வேறு சில செயல்பாடுகளும் (பேஜ் அப், பேஜ் டவுண், ஹோம், எண்ட் மற்றும் ஆரோ கீகளின் செயல்பாடுகள்) உள்ளன. இவற்றை எண்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனில் இவற்றின் இடது மேல் மூலையில் உள்ள நம் லாக் கீயினை அழுத்திச் செயல்படுத்தலாம்.
முப்பரிமான வடிவம் தரும் கூலிரிஸ்
உங்களுடைய இன்டர்நெட் பிரவுசிங் அனுபவத்திற்குக் கூடுதலான மசாலா சேர்க்க விரும்புகிறீர்களா? அதிக ஆர்வத்துடன் நாம் இன்டர்நெட் வெப் சைட்களில் பார்ப்பது, படங்க<ள், கிராபிக்ஸ் தோற்றங்கள், வீடியோ மற்றும் கேம்ஸ் விளையாட்டுக்கள். நம் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் இவற்றிற்கு முப்பரிமாண தோற்றம் தந்து, முற்றிலும் புதிய முறையில் இவற்றைக் காட்டி மகிழ்ச்சிப்படுத்த ஒரு ஆட் ஆன் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் இணிணிடூடிணூடிண். இதன் மூலம் மல்ட்டி மீடியாவைக் காண்பது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.
1. இதனை இயக்கிப் பார்க்க, நீங்கள் இன்டர் நெட் பிரவுசிங் செய்திட, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.
2. www.cooliris.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று கூலிரிஸ் ஆட் ஆன் தொகுப்பிற் கான புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும்.
3. இந்த ஆட் ஆன் தொகுப்பு இன்ஸ்டால் ஆனவுடன், மீண்டும் பயர்பாக்ஸினை இயக்கவும்.
4. இப்போது பயர்பாக்ஸ் திரை வித்தியாசமாக அமைந்திருக்கும்.
5. பயர்பாக்ஸ் கிடைத்தவுடன் அதன் டூல் பாரின் மேல் வலது மூலையில் கூலிரிஸ் ஐகான் அமைந்திருக்கும். அதில் கிளிக் செய்திடவும்.
6. கூலிரிஸ் இன்டர்பேஸ் திறக்கப்படும். இதில் மூன்று பிரிவுகளைக் காணலாம். மெனு, சர்ச் மற்றும் கீழாக ஸ்குரோல் என மூன்று பிரிவுகள் கிடைக்கும்.
7. இனி சர்ச் பாக்ஸ் சென்று உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோவினைத் தேடிப்பாருங்கள். அதே போல படங்களையும் தேடிப் பாருங்கள். எல்லாமே தம்ப்நெயில் படங்களாகக் காட்சி அளிக்கும். அதிலிருந்து தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். படம் காட்டப்படும்.
8. பேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற தளங்களுடனும் இதனைப் பயன்படுத்தலாம். எந்த தளங்களில் இது செயல்படும் என்பதனை http://www.cooliris.com/product/supported என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.
9. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயர்பாக்ஸை இயக்கி, அதில் படங்கள் மற்றும் வீடியோ கிளிப்கள் இருக்கும் பைல்கள் உள்ள போல்டருக்குச் செல்லுங்கள். அனைத்தும் தம்ப் நெயில் படங்களாக, பிலிம் ஸ்ட்ரிப் போலக் காட்டப்படும். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைக் கிளிக் செய்தால் அந்த படம் முன்வந்து உங்களுக்குத் திரையில் காட்டப்படும்.
10. இது எப்போதும் இயக்கத்தில் இருக்காது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து நீங்கள் வழக்கம்போல டேப் பிரவுசிங் செய்யலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பு வேண்டும் என்றால் மட்டும் இயக்கிப் பார்க்கலாம். இதனைக் கம்ப்யூட்டரிலிருந்து எடுக்க வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை. பயர்பாக்ஸ் மெனுவிலிருந்து டூல்ஸ், ஆட் ஆன் கிளிக் செய்தால் உங்கள் சிஸ்டத்தில் பயர்பாக்ஸ் தொகுப்பிற்கென இணைக்கப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். அதில் இந்த பிரிவைத் தேர்ந்தெடுத்து, பின் அன் இன்ஸ்டால் கொடுத்தால் உடனே இது நீக்கப்படும். எனவே தைரியமாக இதனை இன்ஸ்டால் செய்து சோதனை செய்து பார்க்கலாம்; பிடித்திருந்தால் சிஸ்டத்தில் வைத்துக் கொண்டு இயக்கலாம்; இல்லையேல் நீக்கலாம்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment