ரஷியாவிடம் உள்ள ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல: அமெரிக்க நிபுணர் தகவல்
லண்டன், செப். 29-
2-ம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்ததும் அதன் அதிபர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
ஜெர்மனியில் புக்ரைன் என்ற இடத்தில் இருந்த பாதாள அறையில் அவர் சயனைடு மாத்திரை விழுங்கி பின்னர் தன்னைத்தானே சுட்டு கொன்றதாக தகவல் வெளியானது. பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த பாதாள அறையில் இருந்து ரஷிய படைகள் ஹிட்லர் மண்டை ஓட்டை கைப்பற்றினர். அது இப்போதும் ரஷியாவிடம் இருக்கிறது. அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஓட்டையும் உள்ளது.
அந்த மண்டை ஓட்டை அமெரிக்காவை சேர்ந்த தொல்லியல் நிபுணர் ரிக் பல்லேன் டோனி ஆய்வு செய்தார். டி.என்.ஏ.பரி சோதனையும் நடத்தினார். இதில் அந்த மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்று தெரிய வந்துள்ளது.
இது பற்றி அவர் கூறியதாவது:-
இந்த மண்டை ஓடு பெண்ணுக்குரியது. ஆண்கள் மண்டை ஓடு கடினமானதாகவும், பெண்கள் மண்டை ஓடு மெல்லியதாகவும் இருக்கும். இது மெல்லியதாக இருக்கிறது. எனவே இந்த மண்டை ஓடு பெண்ணுக்குரியது.
ஹிட்லர் இறந்த போது அவருக்கு வயது 56. ஆனால் மண்டை ஓட்டை ஆய்வு செய்ததில் அதற்கு 40 வயதுக்கும் குறைவாக இருக்கிறது. எனவே இது ஹிட்லர் மண்டை ஓடு அல்ல என்பது உறுதியாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல என்று கூறுவதால் அவர் உண்மையிலேயே பாதாள அறையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எங்கும் சென்று விட்டாரா? என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment