Sunday, September 13, 2009

பொய்யென நிரூபிக்க அரசு பயன்படுத்திய வீடியோ அசலானது அல்ல

 

ஓகஸ்டில் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் இவ்வாறு பொய்யென நிரூபிப்பதற்காக அரசு உண்மையான வீடியோவைப் பயன்படுத்தவில்லை. 

அதாவது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதைத் தாம் பதிவு செய்து அந்த வீடியோவையே பயன்படுத்தி தமது நிரூபித்தல்களைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான் தமிழர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இன அழிப்புக்கு எதிரான அமைப்பு அமெரிக்க நிபுணர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்க நிபுணர்கள் கொடுத்த ஆரம்பகட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,

ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ .gp3 கோப்பாகும். ஆனால் சனல் 4 உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பயன்படுத்தியது வலை- ஒளிபரப்பு பதிவு என்னும் மாற்றப்பட்ட வடிவமாகும். அதாவது H263 (.gp3) வடிவத்திலிருந்து Flash-9, 10 இல் இயக்கக்கூடிய .avi வடிவமாக மாற்றப்பட்ட H264 வடிவத்தையே அரசு பயன்படுத்தியுள்ளது. ஒளி, ஒலி என்பவை சரியாக ஒத்திசையவில்லை என இலங்கையரசு சுட்டிக்காட்டியிருந்தது. இது இவ்வாறு வடிவம் மாற்றப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தியதால் தோன்றியது எனக் கூறுகின்றனர் அமெரிக்க நிபுணர்கள்.

ஆனால் கைத்தொலைபேசி .gp3 வீடியோ எடுக்கப்பட்டது ஜூலை 18 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஜனவரி மாதத்தில் ஒரு ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதென ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. இந்த திகதிச் சிக்கலைத் தீர்ப்பது பற்றியும் தாம் சிந்தித்து வருவதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு கூறியுள்ளது.


source:athirvu
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails