தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை இன்னும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சட்டவிளக்கங்கள் இடம்பெற்று கொண்டிருப்பதால் இன்னும் அது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளது. அதேவேளை, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான வழக்கிலிருந்து முதலாம் இரண்டாம் பிரதிவாதிகளான பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8 ஆம் திகதி லோக்சபையில் கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஸ்ணா, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கையிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருந்தார். |
No comments:
Post a Comment