Sunday, September 6, 2009

விடுதலைப்புலிகள் தளபதி பொட்டு அம்மான், சூசை உயிரோடு இருப்பதாக தகவல்






விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் உளவுப்படை தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர் சூசை ஆகியோரையும் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

இதில் பிரபாகரன் உடலை காட்டினார்கள். பொட்டு அம்மான், சூசை உடலை காட்டவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.
எனவே அவர்கள் இறப்பு சான்றிதழை தருமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டது. ஆனால் இதுவரை இறப்பு சான்றிதழை வழங்கவில்லை.

இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் துறை தான் இந்த சான்றிதழை வழங்க வேண்டும். ஆனால் அந்த துறை சான்றிதழை கொடுக்க மறுத்து வருகிறது.

ஏன் என்றால் பிரபாகரன் உடலை மட்டும்தான் இலங்கை அரசு மீட்டு உள்ளது. பொட்டு அம்மான் உடலை காட்டவில்லை. எனவே பொட்டு அம்மான் உயிரோடு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மே 17-ந்தேதி இறுதி சண்டை நடந்த போது பொட்டு அம்மானும், சூசையும் நந்தி கடல் வழியாக, தப்பி விட்டதாகவும், அவர்கள் உயிரோடு இருப்பதாகவும் இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவேதான் அட்டர்னி ஜெனரல் துறை இறப்பு சான்றிதழை வழங்க மறுத்து வருகிறது. இறப்பு சான்றிதழை வழங்கிய பிறகு பொட்டு அம்மான் உயிரோடு வந்து விட்டால் அது சட்ட சிக்கலை ஏற்படுத்துவதுடன் இலங்கைக்கு அவமான மாகவும் அமைந்து விடும் எனவே தான் தயக்கம் காட்டி வருகின்றனர்.

source:egarai
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails