Saturday, September 5, 2009

இந்தியப் பெண்கள் 'தம்' அடிப்பதில் 3வது இடம்

புதுடில்லி: உலகளவில், சிகரெட் பிடிப்பதில் இந்திய பெண்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் மற்றும் உலக நுரையீரல் சிகிச்சை அமைப்பு இணைந்து, பல நாடுகளில் சர்வே எடுத்தது. பெண்கள் புகை பிடிக்கும் பழக்கம் தொடர்பாக இந்தியா உட்பட 20 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சிகரெட் பிடிப்பதில், உலகப்பெண்களில் முதலில் உள்ளவர்கள் அமெரிக்க பெண்கள்; அங்கு, இரண்டரை கோடி பெண்கள் சிகரெட் புகைக்கின்றனர்.



இரண்டாவதாக உள்ள சீனாவில் 1.3 கோடி பெண்கள் உள்ளனர். மூன்றாவதாக உள்ளவர்கள் இந்திய பெண்கள். 1.1 கோடிபேர் புகை பிடிக்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தான், 30 லட்சம் புகைப்பிடிக்கும் பெண்களுடன் இப்பட்டியலில் கடைசியாக அந்த நாடு 20வது இடத்தில் உள்ளது."புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள இந்திய பெண்கள், மற்ற நாட்டு பெண்களை காட்டிலும் எட்டு ஆண்டுகள் முன்னதாகவே இறந்து விடுகின்றனர்; உலகளவில் ஒரு நாளைக்கு 25 கோடி பெண்கள் புகைப்பிடிக்கின்றனர், ஏழை நாடு
களில் புகை பிடிப்பவர்கள் குறைவு; வளர்ந்த நாடுகளில் தான் அதிகமாக இந்த பழக்கம் பரவுகிறது' என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது



--
 
source:dinamalar
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails