வன்னி போர் நடவடிக்கை வீடியோக்கள் அனைத்தும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்குமாறு உத்தரவு |
வன்னி போர் முன்னெடுப்பு சம்பந்தமான அனைத்து வீடியோ நாடாக்களும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசதொலைக்காட்சி சேவைகளான இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை (ஐ.ரி.என்) என்பவற்றின் தலைவர்கள் தம்மிடம் உள்ள போர் சம்பந்தமான அனைத்து வீடியோ நாடாக்களையும் உடனடியாக கையளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான வீடியோக் காட்சிகள் இந்த இரு நிறுவனங்களில் இருந்து களவாக வெளியே கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. அதனால் தம்மிடம் இருக்கும் போர் குறித்த வீடியோக்கள் அனைத்தையும் உடனே சரிபார்த்து, ஏதாவது காணாமல் போயுள்ளதா என அறியுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், சில அரசாங்க அதிகாரிகளின் மீது சந்தேகப்பார்வை விழுந்துள்ளதுள்ளதாம். பயன்படுத்தப்படாத சில போர் குறித்த வீடியோ நாடாக்கள் பணத்துக்காக களவாக விற்கப்படுவதாக அரசாங்கத்துக்கு புகார் கிடைத்துள்ளதாம். இலங்கை இராணுவம் தமிழ் இளைஞ்ர்களைக் கொல்லும் வீடியோக்காட்சிகள், இலங்கையில் எடுக்கப்பட்டது அல்ல என முற்றுமுழுதாக மறுத்துவரும் அரசாங்கம் தற்போது, இவ் அறிவித்தலை விடுத்திருப்பது பெரும் சந்தேகங்களை கிளப்புகிறது. |
Friday, September 4, 2009
இலங்கை அறிவிப்பு:வன்னிப் போரின் போது எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் ஒப்படைக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment