பல வேளைகளில் என்ன செய்தாலும் கம்ப் யூட்டர் ஆன் ஆகாமல் அப்படியே இருக் கும். மொத்தமாக ஜடம் மாதிரி அமர்ந்து கொண்டு உயிர் இருக்கிறதா இல்லையா என்று நம்மைச் சந்தேகப்பட வைக்கும்? அப்படிப்பட்ட வேளைகளில் நாம் சில முதல் கட்ட சோதனைகளையும் முதல் உதவி சிகிச்சைகளையும் செய்ய வேண்டியதிருக்கும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
1. முதலில் நீங்கள் பார்க்க வேண்டியது அதற்கான பவர் சப்ளை. மின்சாரம் தரும் யு.பி.எஸ். சாதனத்தில் அதன் இயக்க நிலையைக் காட்டும் எல்.இ.டி. விளக்கு எரிகிறதா? அல்லது விட்டு விட்டு எரிகிறதா? அதற்கு பவர் போதவில்லை என் றால் அதனைச் சிறிது நேரம் சார்ஜ் செய்துவிட்டு பின் கம்ப்யூட்டரை ஆன் செய்திடலாம். யு.பி.எஸ். இயங்கா நிலையில் இருந்தால் சற்று நேரத்திற்குக் கம்ப்யூட் டரை நேரடி மின்சாரத்தில் இயங்க வைக்கலாம். இதற்கு கம்ப்யூட்டரின்மின் சக்தி கேபிள் சரியாக மானிட்டரிலும் சி.பி.யு. விலும் செருகப்பட்டுள்ளதா என்று கவனிக்கவும். ஒருமுறை அதிலிருந்து எடுத்து மீண்டும் செருகிப் பார்க்கவும். அதன் பின்னும் கம்ப்யூட்டர் இயங்கவில்லை என்றால் இணைக்கும் பவர் கேபிள் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். ஒரு வேளை அதிலும் பிரச்சினை இருக்கலாம். இதற்கு வேறு ஒரு கேபிள் கொண்டு வந்து இணைத்துப் பார்ப்பதே நல்லது. இந்த கேபிள் வழியாக கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கினால் கேபிள்தான் சரியில்லை என்று தெரிய வருகிறது. எனவே அதனை மாற்றுவதுடன் நம் பிரச்சினை தீர்கிறது.
2. அடுத்த வழியினைச் சோதித்துப் பார்க்கும் முன் முதலில் உங்கள் கம்ப்யூட்டர் முழுமையாக ஷட் டவுண்ட் செய்யப்பட்டு மின் சக்தி அறவே நிறுத்தப்பட்டுவிட்டதனை உறுதி செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிறு சிறு பாகங்கள் அனைத்தும் ஸ்டேட் டிக் எலக்ட்ரிக்கல் சார்ஜ் பெறுவதில் மிகவும் சென்சிடிவ் ஆனவை என்பதை நினைவில் கொள்ளவும். எனவே நம் உடலில் உள்ள ஸ்டேட்டிக் மின்சாரத்தை வெளியேற்றவும். இதற்கு அருகில் உள்ள இரும்பு கொண்ட சாதனத்தின் மீது கைகளை வைத்து எடுக்கவும்.
அடுத்து சிபியுவினைத் திறக்கவும். மறக்காமல் அதன் ஸ்குரூக்களை கவனமாக எது எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பதற்கு அடையாளம் செய்து கொண்டு அவற்றை சிறிய டப்பா ஒன்றில் போட்டு வைக்கவும். பின் உள்ளே உள்ள அனைத்து இணைப்பு வயர் கார்டுகளும் சரியாக இணைக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் பின் சிபியுவின் மதர் போர்ட், ஹார்ட் டிஸ்க், பவர் பாக்ஸ் ஆகிய அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள கேபிள் கள் சரியாகப் பொருந்தி உள்ளனவா என்று சரி பார்க்கவும். வீடியோ கார்டு, சவுண்ட் கார்டு, மோடம் அல்லது லேன் கார்டு என அனைத்தையும் சரி பார்க்கவும். கவனமாக அனைத்தையும் நீக்கிப் பின் மாட்டவும்.
3. இனி மறுபடியும் மின் கேபிள் உட்பட அனைத்தையும் சரியாக இணைத்தபின் கம்ப்யூட்டரை இயக்கிப்பார்க்கவும்.
4. இதிலும் சரியாக இல்லை என்றால் கம்ப்யூட்டர் இயங்குவதற்கு அடிப்படையில் தேவையான உபகரணங்களை மட் டும் இணைத்துவிட்டு மற்றவற்றை கழட்டவும். பின் ஒவ்வொன்றாக அவற்றை இணைத்துப் பார்த்தால் இந்த உபரி சாதன இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதனை இணைக்கும்போது கம்ப்யூட்டர் இயங்காமல் போவதனைப் பார்க்கலாம். கம்ப்யூட்டரின் பாகங்களைக் கழற்றி மீண்டும் இணைக்கையில் அதி தீவிர கவனம் தேவை. கழட்டும் முன் அது எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்று பார்த்து, தேவையானால் குறித்துக் கொண்டு, பின் கழட்டி மாட்டவும். சில கார்டுகள் குறிப்பிட்ட திசையில் மட்டுமே செருகும். தவறாகச் செருக முயற்சிக்கையில் உள்ளே நுழையாது.
உடனே அங்கு பலத்தைப் பிரயோகித்து அழுத்த முயற்சித்தால் இரு பக்கமும் உடைந்து பலனில்லாமல் போய்விடும். சரியாக்குவதற்கு அதிகச் செலவாகும் சூழ்நிலை ஏற்படும். எதுவுமே சரியில்லை என நீங்கள் எண்ணினால் உடனே அதற்கான டெக்னீஷியனை அழைப்பதுதான் சரி.
வெர்ஜின் மொபைல் லிம்கா சாதனை
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் தொடர்ந்து 100 மணி நேர இசை வழங்கிய சாதனையை வெர்ஜின் மொபைல் நிறுவனம் அண்மையில் பெங்களூருவில் நடத்தியது. பல மாநிலங்களிலிருந்து ஏறத்தாழ 50 இசைக்குழுக்களை வரவழைத்து பிளாநட் எம் உடன் இணைந்து ராக்கத்தான் (Rockathon) என்ற இசை நிகழ்ச்சி மூலம் 5 நாட்களுக்குத் தொடர்ந்து 100 மணி நேரம் இசையை இந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய வி ஜாஸ் மொபைல் மூலம் இதன் வாடிக்கையாளர்கள் கேட்டு மகிழ்ந்தனர். இணைய தளம் மூலமாகவும் இதனைக் கேட்டு மகிழ வசதி செய்யப்பட்டிருந்தது. இசை நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்து ரசித்தவர்களுக்கு ரூ.5ம் இணைய தளம் மூலம் கேட்டு ரசித்தவர்களுக்கு ரூ.1.50ம் பரிசாக வழங்கப் பட்டதாக வெர்ஜின் மொபைல் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. இவ்வகையில் ரூ.2 லட்சம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வெர்ஜின் மொபைல் செவித்திறன் குறைந்தோர் நல நிதியாகவும் ரூ.2 லட்சம் வழங்கியுள்ளது. வெர்ஜின் மொபைல்சேவை இந்தியா முழுவதும் 14 மையங்களில் டாட்டா டெலி சர்வீசஸ் மூலம் தரப்படுகின்றன. 3,20,000 நகரங்களில் இந்த போன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் டாப் அப் கார்டுகள் 75,000 கடைகளில் கிடைக்கின்ற வகையில் விற்பனை நெட்வொர்க் செயல்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment