இந்திய அர்சியல்வாதிகள் சிலர் புலிகளிடம் பணம் பெற்றதாகவும், இந்திய திரைப்படங்களுக்கு புலிகள் முதலீடு செய்ததாகவும் அண்மையில் எழும்பிய சர்ச்சை சிறிது அடங்கிப் போகிறது எனப் பார்த்தால், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் இதுகுறித்துப் பேசியுள்ளார். தமது கட்டுப்பாட்டில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் வாக்குமூலத்தை வைத்தே தாம் இதைக் கூறுவதாகவும், ரஜினிகாந்தின் குசேலன் படத் தயாரிப்புக்காக லண்டன் வாழ் தமிழர் ஊடாக புலிகள் நிதியளித்தார்கள் என்றும் மேலும் கூறுகிறார். ஆனால் இந்த நிதி நேரடியாக வழங்கப்படாததால், இவ்விடயம் ரஜினிகாந்துக்கு தெரியாமல் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார் அவர். Gulf Times க்கு நேற்றிரவு அளித்த பேட்டியொன்றிலேயே இக்கருத்துகளை ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.
தமது கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய புலித் தலைவரான கே.பி என்றழைக்கப்படும் பத்மாநாதன் பல தகவல்களைத் தருவதாகவும் அவரே கொழும்பின் மிக முக்கிய தகவலாளி எனவும் கூறிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,. தமிழ் நாடு திரைப்படங்களுக்கு புலிகள் நிதியுதவி அளிப்பதாக முதலில் ஓகஸ்ட் மாதத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீனுக்கு அப்படி என்ன ரஜனிமேல் கோபம் எனத் தெரியவில்லை. இல்லை தமிழ் நாடு திரைப்பட உலகை சர்சைக்கு உள்ளாக்க விரும்புகிறா ரிஷாட் பதியுதீன்.
--
No comments:
Post a Comment