இஸ்லாமிய மதம் பெண்கள் விடயத்தில் காட்டும் போக்கு பற்றி கடுமையாக விமர்சித்த ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் பர்வீஸ் கம்பக்ஷுக்கு 2007 இல் தூக்குத் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு, 20 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஊடக உரிமைகள் குழு இந்த பொது மன்னிப்பை வரவேற்றிருக்கும் இவ்வேளை, விடுவிக்கப்பட்ட பர்வேஸுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று தஞ்சம் வழங்கியுள்ளதால் அவர் ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்று விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பர்வேஸை தூக்கிலிடுவோம் என சிலர் மிரட்டியதாலேயே அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சில குழுக்கள் கூறியுள்ளன. இதேவேளை தமது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளும்படி தம்மைத் துன்புறுத்தியதாக சர்வேஸ் கூறியுள்ளார். இவருக்கெதிரான வழக்கு விசாரணைகளின்போது இவருக்காக வாதாடவென ஒரு வக்கீலும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. | -- |
Friday, September 11, 2009
இஸ்லாம் மதத்தை விமர்சித்த ஆப்கான் ஊடகவியலாளர் விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment