கோலாலம்பூர்: "ஓட்டலில் பீர் குடித்த பெண் ணுக்கு விதிக்கப்பட்ட பிரம்படி தண்டனையை, விரைவில் நிறைவேற்ற வேண்டும்' என, மலேசியாவில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ என்ற மலேசிய பெண். ஓட்டல் ஒன்றில் பீர் குடித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மலேசிய கோர்ட்டில் நடந்த விசாரணையின் முடிவில், பீர் குடித்ததற்காக இவருக்கு ஆறு பிரம்படிகள் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.மலேசியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பிரம்படி தண்டனை வழங்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. ரம்ஜான் புனித மாதம் துவங்கியதை ஒட்டி, கார்த்திகாவுக்கு தண்டனை வழங்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கு தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ரம்ஜான் மாதம் முடிவுக்கு வரவுள்ளதை அடுத்து, கார்த்திகாவுக்கு பிரம்படி வழங்க வேண்டும் என, மலேசியாவில் வசிக்கும் பழமைவாத கொள்கை யை பின்பற்றுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கெலந்தன் மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இதை வரவேற்றுள்ளனர். அப்துல் ஹமீத் என்பவர் கூறுகையில், "கார்த்திகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக கடுமையானது அல்ல. பாடம் கற்பிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. ரம்ஜான் மாதம் முடிந்ததும், அவருக்கான தண்டனை நிறைவேற்ற வேண்டும்' என்றார்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment