Wednesday, September 23, 2009

போலியாக 'அடிக்க' முடியாத பிளாஸ்டிக் நோட்டு அறிமுகம்

போலியாக 'அடிக்க' முடியாத பிளாஸ்டிக் நோட்டு அறிமுகம்
 

புதுடில்லி : பத்து ரூபாய் மதிப்பில் புதிதாக பாலிமர் (பிளாஸ் டிக்) ரக ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, பத்து ரூபாய் மதிப்பில் 100 கோடி நோட்டுக்கள் வெளியிடப்படும்.



இப்போதுள்ள ரூபாய் நோட்டுக்கள், அதிகபட்சம் ஓராண்டு வரை கசங்காமல், அழுக்காகாமல் இருக்கும்; ஆனால், இந்த பாலிமர் நோட்டு, ஐந்தாண்டு வரை அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் நோட்டுக்களை போலியாக தயாரிக்க முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சர்வதேச நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டியுள்ளன. அடுத்த மாதம் 20ம் தேதி அன்று டெண்டர் மீது முடிவெடுக்கப்படும்.



இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் தான் பாலிமர் ரக நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரக நோட்டுக்களில் பாதுகாப்பு தொழில்நுட்பம் அதிகம் இருப்பதால், போலி ரூபாய் நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இது உதவும்' என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்து, நியூ கொய்னா, ருமேனியா, பெர்முடா, புருனை, வியட்நாம் நாடுகளில் பாலிமர் கரன்சி நோட்டுகள் நடைமுறையில் உள்ளன.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails