வாஷிங்டன், செப். 3-
விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது கைது செய்யப்பட்ட தமிழர்களின் கண்களையும், கைகளையும் கட்டி, நிர்வாண நிலையில் இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. அந்த வீடியோ காட்சிகளை இங்கிலாந்து தொலைக்காட்சி சேனல்-4 ஒளிபரப்பியது.
இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இரக்கமற்ற இந்த கொலை வெறிக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இதற்கு அமெரிக்காவும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சூசன்ரைஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த வீடியோ போலியானது என இலங்கை அரசு மறுத்துள்ளது. இருந்தாலும் இந்த வீடியோ காட்சிகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஆனால் இந்த பிரச்சினையை கவுன்சில் எடுக்குமா? என்பத தெளிவாக தெரியவில்லை என்று தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் நடந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் சிறப்பு செய்தி தொடர்பாளர் பிலிப் அல்ஸ்டன் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களை கொடூர முறையில் ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தும். இச்சம்பவத்தின் மூலம் இலங்கை ராணுவம் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக நடந்துள்ளது. வீடியோ போலியானது என இலங்கை அரசு மறுத்துள்ளது.
ஆனால், இலங்கையில் ஜனநாகத்தை ஏற்றுக்கொள்ளும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் கொடுத்த வீடியோவை ஒளிபரப்பியதாக சேனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை பிணங்களை புதைக்கும் இடமாக, மாறி வருவதையே இந்த வீடியோ காட்சி எடுத்துக்காட்டுகிறது என்றார்
மூலம்:மாலைமலர்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment