சண்டிகார் : அரியானா மாநிலத்தில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் பலர், தங்கள் மகனுக்கு வரன் பார்த்து தரும்படி வற்புறுத்துகின்றனர். அரியானாவில் பெண் சிசு கொலை அதிகம் காணப்பட்டதால், தற்போது அந்த மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 861 பெண்கள் என்ற விகிதத்தில் மக்கள் தொகை உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
கிராமப்புறங்களில் வேட் பாளர்கள் ஓட்டு வேட்டையாடும் போது, வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள்,"உங்களுக்கு ஓட்டு போட வேண்டுமானால், என் மகனுக்கு பெண் பார்த்து தர வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கின்றனர். வேட்பாளரும் வேறு வழியில்லாமல், "பார்ப்போம்' எனக் கூறி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அரியானா முதல்வர் புபிந்தர் ஹூடா குறிப்பிடுகையில், "மாநிலத்தில் பெண்கள் பற்றாக்குறையை போக்க வேண்டுமானால், சிசு கொலை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என்றார். அரியானாவில் வரன் கிடைக்காத ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை பயன்படுத்தி சில புரோக்கர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து பெண் தேடி தருகின்றனர். சில இடங்களில் அழகு, கற்பு தன்மைக்கு ஏற்ப நான்காயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பெண்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.
source:dinamalar
No comments:
Post a Comment