Friday, September 25, 2009

விடுதலைப்புலிகளை பிரிந்த யானை தனித்திருந்து சோகம் காக்கும் அவலம்

 

  
 
அரசியல் அனாதைகள் என்று  கேள்விப்பட்டிருப்பீர்கள். அடைக்கல அனாதைகள் என்பதை கேள்விப்பட்டிருக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவர், தான்  அன்போடு வளர்த்து வந்த விலங்கை  விட்டு சென்றால் அந்த வளர்ப்பு பிராணி அடைக்கல அனாதையாகிறது.  வேறு ஒருவரிடம் அடைக்க்லம் தேடி இப்படி அடைக்கல அனாதையாகி இருக்கிறது ஆஜானுபாகுவான 'பிடி' ஒன்று.

இந்த பெண் யானைக்கு பெயர் என்ன என்பது தெரியாவிட்டாலும் அது வளர்ந்த இடம் கண்ணி வெடிகள் காலைக் கவ்வும் யுத்த முனை. ஆம்... விடுதலைப்புலிகளின் மிச்ச சொச்சங்களில் இந்த பிடியும் ஒன்று...
 

இலங்கை கண்டி அருகே பின்னவாலா என்ற இடத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான அனாதை யானைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது.  80 க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தாயை பிரிந்த, காயமடைந்த, நோயுற்ற யானைகளுக்கு இந்த மையம் தான் புகலிடமாக உள்ளது.  உலகில் அனாதை யானைகளுக்கு என பிரத்யேகமான தனி புகலிடம் இது ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.  21 ஏக்கர் பரப்பளவு  உள்ள இந்த மையத்தில் யானைகள் சுதந்திரமாக் மேய்வதற்கான மேய்ச்சல் நிலம், தென்னந்தோப்பு, யானைகள் குளிக்க ஆறு உட்பட சகல வசதிகளும் உள்ளது. இதைத்தவிர யானைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை  ஒன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.  சுற்றுலாப் பயணிகள் யானைகளை பார்வையிட பிரத்யேக மாடமும் உள்ளது.

ஆயிரக்கணக்கான வெளினாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்த யானைகள் பராமரிப்பு மையத்தை பார்வையிட இலங்கை வருகின்றனர்.  இந்நிலையில் விடுதலைப்புலிகள் 18 ஆண்டுகளாக சீருடனும் சிறப்புடனும் வளர்த்து வந்த பெண் யானை (பிடி) ஒன்றை இலங்கை அரசு இங்கு வைத்து பராமரித்து வருகிறது.  
       
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் போர் நடந்த போது, வவுனியா பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கினர்.  வவுனியாவில் விடுதலைப்புலிகள்  விட்டு சென்ற ஆயுதங்கள் உட்பட பல உடமைகளை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். அதில் 18 வயதான இந்த பெண் யானையும் ஒன்று. 18 ஆண்டுகளுக்கு முன் தாயை  விட்டு தனியாக தவித்துக்  கொண்டிருந்த இந்தக் குட்டியானையை விடுதலைப்புலிகள் காப்பாற்றி பராமரித்து வந்துள்ளனர்.  போருக்குப்பின் அங்கேயே விட்டு சென்று விட்டனர்.  இந்த  யானையை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றி சில காலம் ராணுவ முகாமில் வைத்திருந்தனர்..  பின்னர் கண்டி சின்னவாலா மையத்தில் சேர்த்தனர். இங்கு 80க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தாலும்  இது  விடுதலைப்புலிகள்  வளர்த்த யானை என்பதால் சுற்றுலாப்பயணிகளிடையே தானி மரியாதை உள்ளது.  ஆனாலும் இந்த யானை இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களை நேரில் கண்டதாலோ என்னவோ மெளன சாட்சியமாக உள்ள  இந்த யானை மற்ற யானைகளுடன் சேராமல் சோகத்துடன் தனியே நின்று கொண்டிப்பது சுற்றுலாப்யணிகளிடையே ஒரு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மையத்திற்கு பயிற்சி பெற  சென்று வந்த முதுமலை கால்நடை டாக்டர் கலைவாணன் இந்த யானையை குறித்து  கூறியதாவது;  விடுதலைப்புலிகள் வளர்த்த யானை மக்களிடம் நெருங்கி பழகியுள்ளது. இதன் பெயர் தெரியவில்லை.  அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேர்ந்து நிற்காமல் தனியாகவே உள்ளது.

மக்களிடம் அதிகமாக  பழகியுள்ளதால் இது பொது மக்களை பார்த்தவுடன் ஆர்வமாக சென்று நெருங்கி பழகுகிறது.  முகாமில் உள்ள யானைகளை விட இந்த யானையின் உடல் பலம் அதிகமாக உள்ளது.  இந்த யானையின் கண் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்


source:sangamamlive
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails