ஆஸ்திரியாவுக்கும், சுவிட்சர்லாந்திற்கும் இடைப்பட்ட நாடு லிச்டென்ஸ்டெயின். வடக்கு தெற்காக 24 கி.மீ., கிழக்கு மேற்காக 9 கி.மீ. உடைய மேல் ரைன் நதிக் கரையில் உள்ள சிறிய நாடு. இது ஒரு முடியரசு நாடு. இதன் தலைநகர் வடுஸ்.
இந்த நாட்டின் பரப்பளவு 160 சதுர கிலோ மீட்டர். இங்கு கிட்டத்தட்ட 33 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெருமையான விஷயம் இங்குள்ள நூறு சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றவர்கள். ஜெர்மன் மொழியில் இங்குள்ளவர்கள் பேசுகின்றனர். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.
சுவிஸ் பிராங்க் நாணயம் புழக்கத்தில் உள்ளது. 1866 ஆம் ஆண்டில் சுதந்திரத் தனி முடியர சாகியது. பல பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்கள் தலைமையிடத்தை இங்கு அமைத்துள்ளன. மக் கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அயல் நாட்டுப் பணியாளர்கள்.
1868ஆம் ஆண்டில் இருந்து நடுநிலை வகித்து வரும் நாடாக இந்த நாடு உள்ளது. உலகப் போர்கள் உள்பட எந்த ஐரோப்பியப் போர்களா லும் பாதிப்படையாத நாடு. 1984ஆம் ஆண்டில் ராணுவம் ஒழிக்கப்பட்ட போது பெண் களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
பொருளாதாரம் தொழில் வளத்தைச் சார்ந்தது. கால்நடை வளர்ப்பு, எந்திரம் மற்றும் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கியமானவை. துணி, தோல் பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. ரசாயனங்கள், மரச்சாமான்கள், மண் பாண்டங்கள் ஆகிய வையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
http://www.dailythanthi.com/magazines/nyaru_kudumpa_article_D.htm
No comments:
Post a Comment