Thursday, June 5, 2008

விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் டிஸ்கவரி ராக்கெட் இணைந்தது: ஜப்பான் சோதனை கூடத்தை பொருத்தி நிபுணர்கள் சாதனை

விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் டிஸ்கவரி ராக்கெட் இணைந்தது: ஜப்பான் சோதனை கூடத்தை பொருத்தி நிபுணர்கள் சாதனை

கேட்கனவரால், ஜுன். 4-

அமெரிக்க ராக்கெட் டிஸ்கவரி மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் இணைந்தது. ராக்கெட்டில் கொண்டு சென்ற சோதனை கூடத்தை மிதக் கும் ஆய்வுக்கூடத்தில் நிபுணர்கள் பொருத்தி யுள்ளார்.

விண்வெளியில் அமைக் கப்பட்டு வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக் கூடத்துக்கு டிஸ்கவரி ராக்கெட்டை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பியது. 7 வீரர்களுடனும் ஜப்பான் நாட்டு கிபோ என்ற சோதனை கூடத்தையும். சுமந்து சென்ற டிஸ்கவரி ராக்கெட் கடந்த திங்கட்கிழமை மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் வெற் றிகரமாக இணைந்தது.

டிஸ்கவரி ராக்கெட்டில் இருந்து கிபோ சோதனை கூடத்தை நிபுணர்கள் வெற்றிகரமாக ஆய்வுக் கூடத்தில் பொருத்தினார்கள். இந்த சோதனை கூடம் 16 டன் எடை உள்ளது. விண் வெளியில் நிபுணர்கள் 6 மணி நேரம் இறங்கி நடந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

ராட்சத ரோபர்ட் கைஉத வியுடன் இந்த பணியை வெற்றிகரமாக முடித்தனர். ஆய்வுக்கூடத்தில் பழுதடைந்த கழிப்பிடத்தையும் நிபு ணர்கள் சரி செய்தனர். ஆய்வுக்கூட பணிகளை முடித்தக்கொண்டு டிஸ்கவரி ராக்கெட் 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறது.

ஆய்வுக்கூடத்தில் பொருத் தப்பட்டுள்ள கிபோ சோதனை கூடத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. மிதக்கும் ஆய்வுக்கூட பணியை முடிப் பதற்குள் இன்னும் 9தடவை ராக்கெட்டுகளை செலுத்த வேண்டும்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails