Wednesday, June 4, 2008

செயற்கைக்கோள் உதவியுடன் ரெயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டறியும் நவீன வசதி தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம்


செயற்கைக்கோள் உதவியுடன்
ரெயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டறியும் நவீன வசதி
தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம்


சென்னை, ஜுன்.4-

செயற்கைகோள் உதவியுடன் ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிநëது கொள்ளும் நவீன வசதி விரைவில் தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சரக்கு ரெயில்களில்

ரெயில்வே துறையை நவீனப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சரக்கு போக்குவரத்தில் ரெயில்வே துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரெயிலில் சரக்கு அனுப்புபவர் தனது சரக்குகள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை செயற்கைக்கோள் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. சரக்கு அனுப்பியவர் தனது இருப்பிடத்தில் இருந்தபடியே தொலைபேசி, செல்போன் அல்லது இ-மெயில் மூலம் ரெயில்வே அதிகாரியை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிந்து கொள்கின்றனர்.

ஆனால், இந்த வசதி பயணிகள் ரெயில்களில் தற்போது இல்லை. ரெயில் வருவது, புறப்பட்டு செல்வது பற்றிய தகவல்கள் முந்திய ரெயில் நிலையத்தில் இருந்து அடுத்த ரெயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம்தான் தெரிவிக்கப்படுகின்றன.

டிஜிட்டல் வரைபடம்

செயற்கைக்கோள் உதவியுடன் ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் நவீன வசதிக்காக கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) 7 ஆயிரம் ரெயில் நிலையங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதும் நாடு முழுவதும் ரெயில்களை கையாள்வது எளிதாகிவிடும். ரெயில்களை சரியான திசையில் இயக்கவும், ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை தவிர்க்கவும் முடியும்.

செயற்கைக்கோள் உதவியுடன் ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரெயில் போக்குவரத்து கண்காணிக்கப்படும். ரெயிலின் நிலை பற்றி ரெயில்வே கட்டுப்பாட்டு அறை, ரெயில்வே மேலாளர் அலுவலகம், ரெயில்வே உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள கம்ப்ïட்டர் திரையில் துல்லியமாக பார்க்க முடியும். அதோடு மட்டுமில்லாமல் ரெயில்களை வேகமாக இயக்கவும், தாமதமின்றி ரெயில் வந்து சேரவும் வாய்ப்பு ஏற்படும்.

சோதனை ஓட்டம்

இந்த வசதி, முதல்கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் ராஜதானி, சதாப்தி ரெயில்களிலும், லக்னோ மற்றும் கான்பூருக்கு இடையே ஓடும் பயணிகள் ரெயில்களிலும் சோதித்துப் பார்க்கப்படுகிறது. 10 ஆயிரம் ரெயில் நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails