Monday, November 2, 2009
அமெரிக்காவில் `ஆட்டோ சங்கர்'
அமெரிக்காவில் `ஆட்டோ சங்கர்' பாணியில் பயங்கரம் 6 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரன் கைது பிணங்களை பின்பக்க தோட்டத்தில் புதைத்து வைத்தான் நிïயார்க், நவ.2- 6 இளம் பெண்களை கற்பழித்து கொன்று அவர்களை வீட்டுத் தோட்டத்தில் புதைத்த ஒருவன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். அக்கம்பக்கத்தவர்கள் சந்தேகம் அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் 2005-ம் ஆண்டு முதல் காணாமல் போனார்கள். இவர்கள் மாயமானது குறித்து கிளீவ்லேண்ட் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆன்டனி சோவெல் (வயது 50) என்பவரின் நடவடிக்கை சந்தேகப்படும் வகையில் இருப்பதாக சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் போலீசார் கடந்த வியாழக்கிழமை ஆன்டனியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர். கற்பழித்துக் கொலை அப்போது அந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் 2 பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் கண்டு பிடித்து அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இரண்டு பெண்களையும் தான் கற்பழித்து கொன்றதாக போலீசாரிடம் ஆன்டனி ஒப்புக்கொண்டான். ஆன்டனியை கைது செய்த போலீசார் அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது, அவன் மேலும் 4 பெண்களை கற்பழித்து பின்பக்கத் தோட்டத்தில் புதைத்து வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலையும் தெரிவித்தான். இதனையடுத்து, அந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் ஆன்டனி வசித்த வீட்டின் பின்பக்க தோட்டத்திலிருந்து நேற்று 4 எலும்புக் கூடுகளை தோண்டி எடுத்தனர். பெற்றோர்-உறவினர் குவிந்தனர் ஆன்டனி 6 பெண்களை கற்பழித்து கொன்றது காட்டுத் தீ போல அமெரிக்கா முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து ஆன்டனியின் வீட்டுக்கு ஏராளமானவர்கள் படையெடுத்தனர். கொலையுண்ட பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்ற வேதனை கலந்த எதிர்பார்ப்புடன் ஆன்டனியின் வீட்டின் முன்பாக அவர்கள் காத்து கிடக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி மெக்கிராத் கூறுகையில், `அழுகிய நிலையில் கிடந்த 2 பெண்களும் 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்குள்ளாகத்தான் இத்தனை கொலைகளையும் செய்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் நர்சு வேலை பார்க்கும் அவனது அத்தை கடந்த ஆண்டுதான் ஆன்டனியிடம் இந்த வீட்டை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார்' என்றார். ஆட்டோ சங்கர் பாணி சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு இதே பாணியில் இளம் பெண்களை கற்பழித்தும், ஒரு பெண் உள்பட 6 பேரை கொன்று அவர்களை தனது வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்தும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ சங்கர் பாணியில் இந்த கொலைகளை ஆன்டனி செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதான ஆன்டனி ஏற்கனவே 1989-ம் ஆண்டு ஒரு கற்பழிப்பு குற்றத்திற்காக 15 வருட கடுங்காவல் தண்டனை அடைந்து 2005-ம் ஆண்டு விடுதலை ஆனவன். தான் ஜெயிலில் இருந்து விடுதலையான சில ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு கடந்த ஒரு வருடமாக பெண்களை கடத்தி வந்து கற்பழித்து அவர்களை கொன்று புதைப்பதை ஆன்டனி வழக்கமாக கொண்டிருந்திருக்கிறான் என்று கருதப்படுகிறது. ஓகியோ மாகாண சட்டப்படி ஆன்டனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment