அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 1லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம். இதை சமாளிக்க புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்' என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளது. இந்தநிலை ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் அச்சுறுத்தி வருவதாக அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்படுகின்றன.
source:nakkheeran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment