Saturday, November 7, 2009

நாடு முழுவதும் லஞ்சம்: ஒபாமா எச்சரிக்கை


நாடு முழுவதும் லஞ்சம்: ஆப்கான் அதிபருக்கு ஒபாமா எச்சரிக்கை
 வாஷிங்டன், நவ. 6-
 
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் கடந்த மாதம் (அக்டோபர்) நடந்தது. இதில், தேர்தலில் போட்டியிட்ட அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் 40 சதவீதம் ஓட்டுகளே பெற்றிருந்தார். ஆப்கானிஸ்தான் அரசியல் சட்டப்படி அதிபர் தேர்தலில் போட்டி யிடுபவர் 40 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகளை பெறவேண்டும்.
 
அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் 2-வது கட்டாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, நாளை (7-ந்தேதி) 2-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கர்சாயை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா போட்டியில் இருந்து விலகி கொண்டார். எனவே கர்சாய் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற கர்சாய்க்கு அமெரிக்க அதிபர் பரேக் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
 
இறுதியில் அதுதான் நாட்டை காப்பாற்றும் புதிய அதிபராக பொறுப்பேற்று உள்ள தங்கள் புதிய சரித்திரம் படைக்க வேண்டும்  என்றும் வாழ்த்தினார்.
 
இதற்கு பதில் அளித்த கர்சாய், உங்கள் (ஓபாமா) விருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார். ஆனால், இதை வார்த்தையால் சொன்னால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும் என்று ஒபாமா கூறினார்.
 
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப இருப்பதாக ஒபாமா தெரிவித்தார்.

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails