சவுதி தலைநகர் ரியாத்தில் அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தினர் புதைத்து வைத்திருந்த பெருமளவிலான ஆயுதக் குவியலை காவல் துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். ரியாத்திலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காலி வீடு ஒன்றில், கான்கிரீட் ஸ்லாப்பிற்கு கீழே இந்த ஆயுதக் குவியல் புதைக்கப்பட்டிருந்தது. அதில் 281 துப்பாக்கிகள், 250 மேகசிகன்கள், தோட்டாக்கள் அடங்கிய 35 பெட்டிகள் உள்ளிட்டவை இருந்ததாக ஸவுதி உள்துறை அமைச்சக பேச்சாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் அலி கூறியதாக சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அதே சமயம் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும்,தீவிரவாதிகள் அல்லது கிரிமினல்கள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கலாம் என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்காதவரை யாரையும் கைது செய்ய இயலாது என்றும் அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அல் - காய்தா தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே மேற்கூறிய ஆயுதக்குவியல் கைப்பற்றப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது source:newsonews |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment