Monday, November 2, 2009

கூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது

 
 

பெரும்பாலான இன்டர்நெட் போக்குவரத்து, கூகுள் வழி தான் இயங்குகிறது என்பது சற்று மிகைப் படுத்திக் கூறப்படும் செய்தியாகத் தெரியலாம்; ஆனால், அதுதான் உண்மை என இது குறித்து ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேனல்கள் வழியாகத்தான் இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. ஜிமெயில், ஆர்குட், யு–ட்யூப், நால் எனப் பல இருந்தாலும், பெரும்பாலான இன்டர்நெட் பயன்பாடு யு–ட்யூப் வழியாகவே ஏற்படுகிறது. மொத்த இன்டர்நெட் ட்ராபிக்கில் 6% கூகுள் வழி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இன்டர்நெட் என எடுத்துக் கொண்டால் அது பல்லாயிரக்கணக்கான நெட்வொர்க் வழி இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இன்டர்நெட் பயன்பாட்டில் 50 சதவிகிதத்தை 15 ஆயிரம் நெட்வொர்க்குகள் மேற்கொண்டன. இப்போது அதே 50 சதவிகிதத்தினை 150 நெட்வொர்க்குகள் மட்டுமே மேற்கொள்கின்றன. பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் வழி 30% இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. இப்போதைய மாற்றம் வீடியோ ஸ்ட்ரீமிங் வழியில் அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்த வெப் டிராபிக்கில் 20% வீடியோ சார்ந்ததாகவே உள்ளது. தகவல்களுக்காக இணைய தகவல் தளங்களைத் தேடுவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 சதவிகிதத்திலிருந்து 52 % ஆக உயர்ந்துள்ளது. மற்றவை இமெயில் மற்றும் தனியார் நெட்வொர்க் சார்ந்து உள்ளன



source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails