Friday, June 6, 2008

கிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு

கிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கறுப்புபணம் அனுப்புவதை தடுக்கும் வகையில், கிரெடிட் கார்டுகளை கண்காணிப்பதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச அளவில் தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக, வெளிநாடுகளில் கோடி கணக்கில் பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகஅளவில் கறுப்புபணம் அனுப்பப்படுவதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2005 ஆம் ஆண்டில், கறுப்பு பணம் குவிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்மூலம், இந்திய வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு கறுப்பு பணம் அனுப்புவது கண்காணிக்கப்பட்டது. கறுப்பு பண பரிமாற்றம் குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின், புலானாய்வு அமைப்பு விசாரித்து, அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துவந்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், மாஸ்டர் மற்றும்  விசா கிரெடிட் கார்டுகள், பண பரிமாற்ற சேவை நிறுவனங்கள், கேளிக்கை கூடங்கள் ஆகியவற்றையும் கறுப்பு பணம் குவிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails