கெய்ரோ, ஜுன்.6-
பாகிஸ்தானில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா அறிவித்து உள்ளது.
8 பேர் பலி
பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டென்மார்க் நாட்டு தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 8 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது முதலில் தெரியாமல் இருந்தது. எந்த ஒரு அமைப்பும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
இப்போது இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
இணைய தளத்தில் அறிக்கை
இது தொடர்பாக தீவிரவாதிகள் நடத்தி வரும் இணையதளத்தில் இடம் பெற்று உள்ள அல்கொய்தாவின் அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
டென்மார்க் பத்திரிகைகள் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை மறுபிரசுரம் செய்ததற்காக பழிவாங்கவேண்டும் என்று பின்லேடன் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது
இஸ்லாம் மதத்தை பாதுகாக்கவும், முஸ்லிம்களின் கவுரவத்தை நிலைநாட்டவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
மன்னிப்பு கேட்காவிட்டால்...
கார்ட்டூன்களுக்காக டென்மார்க் மன்னிப்பு கேட்காவிட்டால் மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம். அல்கொய்தா தீவிரவாதிதான் இந்த தாக்குதலை நடத்தினார். இதற்காக சதித்திட்டம் தீட்டி செயல்படுத்த உதவிய பாகிஸ்தான் ஜிஹாதிகளுக்கு (போராளிகள்) நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தளபதி முஸ்தாபா அபுல் யாசித் கையெழுத்திட்டு இருக்கிறார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=417311&disdate=6/6/2008
No comments:
Post a Comment