உணர
மறுக்கும் தேசம்
இஸ்லாமிய
அடிப்படைவாதத்தின் நீண்டகால பலிகடாவாக தொடரும் ஒரு தேசத்தின் மெத்தனத்தை ஜெய்பூர் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் அம்பலமாக்கியுள்ளன. எஸ்.பிரசன்னராஜன்சம்பவம்
நடந்த மறுநாள் எழும் வழக்கமான ஆத்திரம் அடங்கிவிடும்.அதேபோலத்தான் யார் இதை செய்தார்கள் என்ற தேடலும்.சடுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான நகர்களில் ஜெய்பூர் பெயரும் எழுதப்பட்டுவிட்டது.மீண்டும் நாம் மரத்துப்போய் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவோம்.நாளை மற்றொரு நகரம்.இன்னும் சில சிதறிய உடல்களின் பிம்பங்கள் டிவியில் காட்டப்படும்.இப்போதைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கொடுரத்தை தடுக்கும் அரசியல் உறுதியில்லாத ஆளும் வர்கத்தின் அபத்தப் பேச்சுகளை நாம் சகித்துக் கொண்டிருக்கவேண்டியதுதான்.இந்திய தாக்குதலுக்குள்ளாகிறது.இந்தக் கோர சம்பவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரு மாயைதான் என்பதை மீண்டும் உணர்த்த ஒரு முக்கிய சுற்றுலாத் தலம் ரத்தக்களறியான காட்சிகள் நமக்கு தேவையா?நமது எதிரி எதோ முகம் தெரியாத முகாமில் இருக்கவில்லை.நமது தாராள ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி அவன்.அந்த எதிரியின் விசுவாசம் அவனது தேசத்திற்கல்ல,ஒரு கோபமான கடவுளுக்கே அது உரித்தானது.ஜிகாதிகளுக்கு இந்தியா என்பது சொர்கத்திற்குப் போக மிகவும் சுலபமான,அதிக எதிர்ப்பில்லாத ஒரு வழியாக மாறியிருக்கிறது...................... மே 26 இந்தியா டுடே
No comments:
Post a Comment