Sunday, June 1, 2008

பெட்ரோல் விலை உயர்வு முடிவு தள்ளிவைப்பு

பெட்ரோல் விலை உயர்வு முடிவு தள்ளிவைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவது குறித்த முடிவு எடுப்பதை மத்திய அரசு ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், இந்திய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இழப்பை ஈடு செய்வதற்காக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை நேற்று மாலை கூடி முடிவு செய்வதாக இருந்தது.

ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் இப்பிரச்சனையில் ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடு ஆகியவை காரணமாக விலை உயர்வு குறித்த முடிவு எடுப்பதை மத்திய அரசு ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

இபிரச்சனை தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் மூன்று முறை ஆலோசித்தார்.ஆனால் இதில் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் போனது.

இதன் காரணமாக விலை உயர்வு குறித்து முடிவு செய்வதற்காக நேற்று நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails