Thursday, June 5, 2008

நுங்கம்பாக்கத்துக்கு தபாலில் வந்த கிரெடிட் கார்டை திருடி ரூ.42 ஆயிரம் மோசடி: கூரியர் நிறுவன ஊழியர்கள் கைது

 

சென்னை, ஜுன். 4-

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்று தனது வாடிக்கையாளருக்கு புளூ டார்ட் கொரியர் என்ற நிறுவனத்தின் மூலம் கிரெடிட் கார்டு ஒன்றை தபாலில் அனுப்பியது.

அந்த கிரெடிட் கார்டு குறிப்பிட்ட நாட்கள் ஆகியும் வாடிக்கையாளர் கையில் கிடைக்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கியில் புகார் செய்தார். வங்கி நிர்வாகம் கொரியர் நிறு வனத்திடம் விசாரித்தனர். அதில் சம்பந்தப்பட்ட நபருக்கு தபால் அனுப்பி வைக் கப்பட்டது தெரிய வந்தது. ஆனால் இடையில் யாரோ மர்ம நபர்கள் தபாலை பிரித்து கிரெடிட் கார்டை அபேஸ் செய்திருக்கலாம் என சந்தேகித்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பெயருக்கு அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை பயன் படுத்தி ரூ. 42 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கி மர்ம நபர்கள் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கொரியர் நிறுவன மேலாளர் சத்ய மூர்த்தி துணை போலீஸ் கமிஷனர் ராமசுப்பிர மணியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் முரளி, இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மற்றும் போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கொரியர் நிறுவன ஊழியர் ஆல்பர்ட் (வயது19), டிரைவர் வள்ளிமுத்து (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து கிரெடிட் கார்டை திருடி ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வாங்கியது தெரிய வந்தது.

அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 செல்போனையும் பறிமுதல் செய்தனர். கிரெடிட் கார்டில் அடையாளமாக போட்டோ இருந்தும் மோசடி பேர்வழிகளுக்கு செல்போனை விற்ற வியாபாரியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails