இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். இவர் எழுதிய ஹாரிபாட்டார் கதைகள் இவருக்கு பெயரையும், புகழையும் கொடுத்ததோடு, கோடி கோடியாக பணத்தையும் குவித்தது. உலகக் கோடீசுவரர் பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்தது.
இப்போது இங்கிலாந்தில் புதிய எழுத்தாளர் ஒருவர் உருவாகி இருக்கிறார். அவர் பெயர் கேதரைன் பானர். இவருக்கு இப்போது 19 வயதாகிறது. 14 வயது முதலே கதைகள் எழுதி வருகிறார். மாயாஜால உலகில் வாழும் டீனேஜர் லியோ நார்த் என்னும் இளைஞரை மையமாக வைத்து கதைகளை எழுதி வருகிறார். லியோ நார்த் கையில் எழுதப்படாத புத்தகம் கிடைக்கிறது. இந்த புத்தகம் அவரை அதிசய உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது. இப்படி செல்கிறது கதை. இந்த கதைகள் ஹாரி பாட்டர் கதைகளை போல பிரபலம் அடையும் என்று புத்தக பதிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=417555&disdate=6/7/2008
No comments:
Post a Comment