Wednesday, February 3, 2010

ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி


 
 

Top global news update பாக்தாத்:ஈராக்கில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண், யாத்திரிகர்கள் கூட்டத்தில் புகுந்து தன் உடலில் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், 41 பேர் பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது முதல், 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. படிப்படியாக இந்த படைகள் வாபசாகி வருகின்றன.



இதற்கிடையே அடுத்த மாதம் ஈராக்கில் பொதுத்தேர்தல் நடக்கிறது. மைனாரிட்டியான சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன், ஈராக்கை பல ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நீக்கப்பட்டு தற்போது இங்கு ஷியா பிரிவினர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. சதாம் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி இங்கு குண்டு வெடிப்புகளை நடத்தி வருகின்றனர்.அடுத்த மாதம் நடக்கும் பொதுத்தேர்தலை குலைக்கும் பொருட்டு சமீபகாலமாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.



இந்நிலையில் நேற்று முன்தினம், யாத்திரிகர்கள் பலர் தலைநகர் பாக்தாத்திலிருந்து புனித தலமான கர்பாலாவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.இந்த கூட்டத்துக்குள் புகுந்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தன் உடலில் அணிந்திருந்த பெல்ட் வெடிகுண்டை வெடிக்க செய்தார். சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்ததில் 41 பேர் உடல் சிதறி பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.


source:dinamalar

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails