Saturday, February 20, 2010

இன்று ஃபொன்சேகா... நாளை?

 

சுதந்திரப் போராட்டத் தியாகி மதன்லால் திங்கராவை ஆங்கில அரசு தூக்கிலிட்ட சம்பவம் நடந்த சில மாதங்கள் கழித்து, லண்டனில் மிகப் பெரிய தீ விபத்து. லட்சக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்நாசமாகின. அன்று 'இந்தியா' பத்திரிகைக்கு லண்டன் நிருபராக இருந்த வ.வே.சு. ஐயர், மகிழ்ச்சி கலந்த மனநிலையில் கட்டுரை எழுதி அனுப்பினார். 'இந்த தண்டனைக்குக் காரணமானவர்களை ஆண்டவன் பழிதீர்த்துவிட்டான்' என்று. பத்திரிகைஆசிரிய ராக இருந்த பாரதி இதை ஏற்கவில்லை. 'இதென்ன அற்ப சந்தோஷம்?' என்றார்! சரத் ஃபொன்சேகாவைக் கைது செய்ததைக் கேள்விப்பட்டபோது, அப்படிப் பட்ட சந்தோஷம் ஏற்படவில்லை. ஆனால், வினை விதைத்தவன் வினை அறுப் பான் என்ற மூத்தோர் வாக்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டது.பிப்ரவரி எட்டாம் தேதி இரவு 9 மணிக்கு கொழும்பு ராயல் கல்லூரி மாவத்தை என்ற இடத்தில் உள்ள அலுவகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் சோம வன்ச அமரசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சித் தலைவர் ஹக்கீம், மனோ கணே சன் எம்.பி., என இலங்கை அரசியலின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் அருகில் உட்கார்ந்திருக்கும்போது, சரத் ஃபொன்சேகாவைச் சுற்றி வந்தார்கள் ராணு வச் சீருடை ஆட்கள். தினமும் இதுபோன்ற கண்காணிப்பு இருந்து வருவதால், சாதாரணமாகத்தான் இதையும் நினைத்தார் ஃபொன்சேகா. அவரது பாதுகா வலர் வசம் இருந்த துப்பாக்கிகள் பறிக்கப்பட்டு, 'உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்' என்றார்கள். 'என்னை போலீஸ்தான் கைது செய்ய முடியும்' என்று ஃபொன்சேகா சொன்னதை வந்தவர்கள் ஏற்கவில்லை. வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுக்கிறார்கள். கனமான, உயர்ந்த உருவமாக இருப்பதால் அது கஷ்டமாகி, சுற்றிலும் இருந்த கண்ணாடிகள் உடைத்து வெளியே கொண்டுவரப்படுகிறார்.

இரண்டாவது மாடியில் இருந்து தரதரவெனஇழுத்துச் செல்லப்படுகிறார் ஃபொன்சேகா. 'உலகத்தில் உள்ள ராணுவத் தளபதிகளிலேயே சிறந்தவர்ஃபொன்சேகாதான்' என்று இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனால் பட்டம்சூட்டப்பட்டவர், அந்த நாட்டிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார். நாராயணன் இதைக் கேள்விப்பட்டதும் என்ன நினைத்திருப்பாரோ?

ஃபொன்சேகா கைதானபோது, மகிந்தா ராஜ பக்ஷே ரஷ்யாவில் இருந்தார். பயங்கரவாதத்தை இலங்கையில் வேரோடு ஒழித்ததற்காக மாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துப் பாராட்டுவதற்காக அழைத்திருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்குப் பிறகு, இலங்கை அதிகார மையத்தில் இருந்த யாரும் ரஷ்யா போனது இல்லை. அமெரிக்கச் சார்பு நாடாக அடையாளப்பட்டு இருந்ததால் அனுமதியும் கிடைக்கவில்லை. ஐ.நா. சபையில் தன்னை ஆதரித்த ரஷ்யா, டாக்டர் பட்டம் தருவதைப் பாக்கியமாக நினைத்தார் மகிந்தா. அத்துடன் ஃபொன்சேகா கைதுபற்றிய செய்திகளையும் நிமிடத்துக்கு நிமிடம் கேட்டுக்கொண்டார். தேர்தல் தோல்விக்குப் பின்னால் அரசியல் ஆசைகள் வற்றிப்போய் ஃபொன்சேகா, அமெரிக்கா போய் குடியேறிவிடுவார் என்றுதான் மகிந்தா எதிர்பார்த்தார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னால் இலங்கை பத்திரிகைகளில்ஃபொன்சேகா கொடுத்த ஒரு பக்க விளம்பரம், அவர் இனி ஒதுங்கும் ஆள் அல்ல என்பதை அறிவித்தது.''முன்னெப்போதும் இல்லாதவிதத்தில் உண்மை, ஜனநாயகம், நீதி ஆகியவை நசுக்கப்படுகிற ஒரு கடினமான நிலையை நாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. நேர்மையான மாற்றத்தை எதிர்பார்த்து நீங்கள் ஒத்துழைப்பு நல்கி இருந்தாலும், ஜனாதிபதி தேர்தல் முடிவானது சீர்குலைக்கப்பட்டது. உண்மையான வெற்றியாளர் யார் என்பதை முழு நாடுமே அறியும். உங்களது வெற்றியானது சூறையாடப்பட்டு விட்டது. எத்தகைய கஷ்டங்களை எதிர்நோக்கினும் நான் உங்களைக் கைவிட மாட்டேன்.' என்று மக்களை நோக்கி அந்த அறிக்கை யில் கூறிய ஃபொன்சேகா, இலங்கையில் உள்ள பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்தும் ஒடுக்கப்படுவது குறித்து பகிரங் கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இனி வரும் காலம் பத்திரிகைகளுக்கு மேலும் கஷ்டமானது என்றும் அதில் உள்ளது. இந்த விளம்பரம்தான் மகிந்தாவின் கோபத்தை அதிகமாக்கியதாம்.

'இலங்கையில் ராணுவப் புரட்சி நடத்தத் திட்ட மிட்டார்' என்பதுதான் ஃபொன்சேகா மீதான முக்கி யக் குற்றச்சாட்டு. அதோடு கடந்த நான்கு ஆண்டு காலமாக இலங்கையில் நடந்த பத்திரிகையாளர்கள் கொலைகள், தாக்குதல் அனைத்துக்கும்ஃபொன்சேகா தான் காரணம் என்றும் குற்றப்பத்திரிகை தயாரா கிறதாம். 'கொழும்பில் இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பிடிக்கொலன்தான், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த, ரவிராஜ் எம்.பி. ஆகியோரின் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்ததாகவும், அவரைத் தூண்டியது ஃபொன்சேகா என்றும் கொண்டுவரப்போகிறார்கள்' எனப் பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் பேச்சுஇருக் கிறது. ஃபொன்சேகா கொடுத்த விளம்பரத்தில்பத்திரி கையாளர்கள் குறித்து அதிகமான கவலை தெரிவித்துப் பேசியிருப்பதன் பின்னணியும் இந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

ஃபொன்சேகாவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் ஐ.நா. சபைச் செயலாளர் பான் கி மூன் தொடங்கி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரை அக்கறை செலுத்துகிறார்கள். யார் பேச்சையும் எப்போதும் கேட்டுப் பழக்கம் இல் லாத ராஜபக்ஷே இதைக் கேட்பாரா என்ன? தன்னு டைய மகன் நாமல் ராஜபக்ஷேவை அரசியலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியைப் பகிரங்கமாகக் கடந்த 12-ம் தேதி நடத்தினார் மகிந்தா. அதில் பேசும்போது, ''பௌத்த கலாசாரம் நன்றியுடையது. நாட்டின் அமைதியைக்குலைக் கும் காரியத்தில் யார் இறங்கினாலும் சும்மா விட மாட் டேன்'' என்று சொல்லியிருப்பது ஃபொன்சேகாவுக்கான பகிரங்கத் தீர்ப்பு.

அரச பயங்கரவாதம் அடக்கப்படும்போதுமட்டும் தான் இலங்கை அமைதியாகும் என்பதை அனைத்து தரப்பினருக்கும் உணர்த்துகிறது ஃபொன்சேகாவின் கைது!

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails