Friday, February 19, 2010

சமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009


 
 

 நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டு, இணையத்தில் சமுதாய தளங்கள் என்று அழைக்கப்படும் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் (twitter)  போன்ற தளங்களின் அமைப்பிலும், உட்பொருளிலும் பெருத்த மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்பட்டன.
அதுவரை என்ன பீட்ஸா சாப்பிட்டேன்; எந்த தேர்வில் பிரச்னை அதிகம் இருந்தது; தீம் பார்க்கில் ஏன் பெண்கள் கூட்டம் அதிகம் போன்ற கதைகள் இல்லாமல், உலகத்தைப் பாதித்த, பாதிக்கின்ற விஷயங்கள், அரசியல் மாற்றங்கள், விமான விபத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவை அதிக இடம் பெற்றன. 
பொதுவாக இளைஞர்களும், டீன் ஏஜ் கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்த சோஷியல் தளங்களில் பல அனுபவஸ்தர்களும் எழுதத் தொடங்கினார்கள். இதனால் பழைய தலைமுறை அனுபவ வாதிகளுக்கும், புதிய இளைய தலைமுறைக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டது. ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அம்மா, அப்பா ஏன் பாட்டி கூட ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் இடம் பிடித்து கருத்துக்களைப் பரிமாறத் தொடங்கினர்.
இந்த தளங்களைப் பயன்படுத்தும் இணைய நேயர்களின் எண்ணிக்கை 2009ல் அதிகமாகியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தன் 35 ஆவது கோடி பயனாளியை அடையாளம் காட்டியது. ஏப்ரல் மாதத்தில் இந்த தளத்தின் பயனாளர்கள் 1390 கோடி நிமிடங்கள் தளத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இது சென்ற 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 700 சதவீதம் கூடுதலாகும். 
பேஸ்புக் நேயர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்றால், நிச்சயம் வேறு ஒரு தளத்திலிருந்து இங்கு வந்தவர்களா கத்தான் இவர்கள் இருப்பார்கள். இவர்களில் பலர் மை ஸ்பேஸ் (space)  தளத்திலிருந்து வந்தனர். சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் முன்னணி தளமாக, முதலில் வந்த சிலவற்றில் ஒன்றாகும் இது. ஆனால் 2009 ஆம் ஆண்டில், இதன் பங்கு 55 சதவிதத்திலிருந்து 30.26 சதவீதம் ஆகக் குறைந்தது. 
இந்த ஆண்டில் இந்த இரு தளங்களும் தங்கள் வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளில் பல ஒப்பந்தங்களில் இவை ஈடுபட்டு வருகின்றன. 

370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை
சோஷியல் நெட்வொர்க் தளமான ட்விட்டர் 370 பாஸ்வேர்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. எளிதாக யாரும் கண்டுகொள்ளத்தக்க வகையில் உள்ள பாஸ்வேர்டுகளாகச் சிலவற்றை ஒதுக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக 123456 மற்றும் Password என்பவை எல்லாம் மற்றவர்கள் எளிதில் கண்டுகொள்ளத்தக்க சொற்களாகும். இதே போல பிரபலமான கார்களின் பெயர்கள் மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் சொற்களையும் இந்த பட்டியலில் கொடுத்துள்ளது. நல்ல பாஸ்வேர்ட் ஒன்று எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் ஆகியவை கலந்ததாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது


source:dinamaalr

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails