20 பேர் பலி
இஸ்லாமாபாத், பிப். 19-
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை ஒழிக்கும் பணியில் அமெரிக்கா உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் கைபர் பகுதியில் உள்ள அப்பர்திரா பள்ளத்தாக்கில் உள்ள தார்ஸ் கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. அதன் அருகே மார்க்கெட் மற்றும் கடைகள் உள்ளன.
இதில் 20 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த மசூதியில் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
கைபர் பகுதியில் லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் லஸ்கர்-இ-இஸ்லாம் அமைப்பினர் துணை தலைவர் அசாம்கான் உயிரிழந்தார். எனவே, அந்த இயக்கத்தினர் தற்கொலை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே வடக்கு வர்சிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஆளில்லா விமானம் அமெரிக்க ராணுவம் மூலம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment