மெல்போர்ன், பிப்.14-
தினந்தோறும் ஆடை தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. வியர்வை நாற்றத்தை போக்கக்கூடிய வகையில் மேலாடைகள் மற்றும் சட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு என்று பிரத்தியேக உடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த "கிங் ஜீ" என்பவர் நானோ-டெஸ் என்ற டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் கம்பெனிக்காக புதுவித உலோக கலவையிலான சட்டையை தயாரித்துள்ளார்.
இதில் கலக்கப்படும் அபூர்வமான ரசாயன பொருட்கள் உடலில் இருந்து வெளியாகும் வியர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. மேலும் இந்த சட்டையை எளிதில் சலவை செய்ய முடியும்.
இந்த சட்டை மிகவும் நுண்ணிய அணுமூலக்கூறுகளின் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டையை பயன்படுத்துபவர்கள் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட எந்தவிதமான வாசனை திரவியங்களையும் பயன்படுத்த வேண்டியதில்லை
source:maalaimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment