Thursday, February 11, 2010

“மேக்-அப்”புக்கு அதிக நேரம் செலவழிக்கும் ஆண்கள்;


பெண்களை விட "மேக்-அப்"புக்கு அதிக நேரம் செலவழிக்கும் ஆண்கள்; ஆய்வில் புதிய தகவல்
 பெண்களை விட லண்டன், பிப். 11-
 
பெண்களை விட ஆண்களே மேக்-அப்புக்கு அதிக நேரம் செலவு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டில் இருந்து வெளியே புறப்படும் பெண்கள் "மேக்-அப்"புக்கு அதிக நேரம் செலவு செய்வதாக எல்லோரும் சொல்கிறோம். ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் அதிக நேரம் மேக்-அப் செய்து கொள்கிறார்கள் என்று இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு சொல்கிறது.
 
ஆய்வு நிறுவனம் ஒன்று இங்கிலாந்தில் 3 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்ய அவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
இதில் ஆண்கள் "மேக்-அப்" செய்ய சராசரியாக 83 நிமிடம் எடுத்துக் கொண்டனர். பெண்கள் 79 நிமிடம் மட்டுமே எடுத்துக்கொண்டனர். அதாவது பெண்களை விட ஆண்கள் 4 நிமிடம் அதிகம் எடுத்துக் கொண்டனர்.
 
முகச் சவரம், முடி அலங்காரம், முகத்தை அழகு படுத்துதல், ஆடைகளை தேர்வு செய்தல் என ஒரு நாளைக்கு 83 நிமிடத்தை செலவழித்தனர்.
 
ஆனால் மேக்-அப்புக்காக செலவு செய்வதில் பெண்களே முன்னணியில் இருந்தனர்

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails