தாகா : வங்க தேசத்தில் பெண் ஒருவரை கற்பழித்தவனுக்கு எவ்வித தண்டனையும் வழங்காமல், அதனால் பாதிக்கப்பட்டு, கர்ப்பமடைந்த பெண்ணுக்கு 101 கசையடி வழங்க தண்டனை வழங்கப்பட்டதாக, அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, வங்க தேச பத்திரிகையான "டெய்லி ஸ்டார்' வெளியிட்டுள்ள செய்தி:வங்க தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எனாமுல் மியா(20). இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை, அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல், மாதம், அந்த பெண்ணை எனாமுல் மியா கற்பழித்தார். இதை வெளியில் கூறினால், தனக்கு அவமானம் என்று கருதிய அந்த பெண், இச்சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் நடந்த சில மாதங்களில், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின், அந்த பெண், கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பெண்ணை திருமணம் செய்தவர், திருமணமான சில வாரங்களிலேயே விவாகரத்து செய்துவிட்டார்.இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கிராமத்தினர், 101 கசையடிகள் வழங்க தீர்ப்பு வழங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, கிராமத்தினர் நிர்ணயித்த அபராத தொகையை செலுத்த வேண்டும், இல்லையென்றால், அவர்கள் குடும்பம் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என தண்டனை வழங்கினர். ஆனால், அந்த பெண்ணை கற்பழித்த எனாமுல் மியாவிற்கு, எவ்வித தண்டனையும் வழங்கவில்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. source:dinamalar
Friday, February 5, 2010
கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment