Friday, February 5, 2010

பந்தை சேதப்படுத்திய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்

பந்தை சேதப்படுத்துவது தவறா?

  

கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்துவது தொடர்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் அடிக்கடி இப்பிரச்னையில் மாட்டிக் கொள்கின்றனர். 
எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற, பந்து வீசும் அணியின் வீரர்கள் பந்தை சேதப்படுத்துகின்றனர். தலை முடிக்கு பயன்படுத்தும் ஜெல், ஜெல்லி வகை மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை, பந்தின் மீது தடவுதல், பிளேட் மற்றும் கூரிய கருவிகளால் பந்தை சுரண்டுதல், பந்தை வாயினால் கடித்தல் போன்ற செயல்கள் சேதப்படுத்துதல் குற்றமாக கருதப்படுகிறது.
பெரும் தவறு
இவ்வாறு பந்தை சேதப்படுத்துதல் குற்றமாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்துள்ள கிரிக்கெட் விதிகளின் படி (விதி 42, பிரிவு 3) இதற்கு பல வகை தண்டனைகள் உள்ளன. பந்து சேதப்படுத்தப்பட்ட அளவின் படி, மைதானத்தில் உள்ள அம்பயர்கள் உடனடி தீர்ப்பு வழங்குவர். ஒரு வீரர் பந்தை சேதப்படுத்திவிட்டால், எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இச்சம்பவம் கடந்த 2006 ம் ஆண்டு இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய போட்டியில் அரங்கேறியது. அம்பயர்களின் முடிவை ஏற்க மறுத்த பாகிஸ்தான் வீரர்கள் போட்டியை தொடர மறுத்து விட்டனர். இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
அபராதம்
 ஒரு போட்டியில் அடிக்கடி ஒரு வீரர் பந்தை சேதப்படுத்திக் கொண்டிருந்தால், பவுலிங் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பின் இவ்வகை குற்றத்துக்கான தண்டனை அதிகப்படுத்தப்பட்டது. அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 1994 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக லார்ட்சில் நடந்த போட்டியில், இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது "டிவி', கேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கிரிக்கெட்டில் அதிக பயன்பாட்டில் உள்ளன. இதனால் பந்தை சேதப்படுத்துவோர் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடுகின்றனர். 
போட்டி தடை
பெரும்பாலும் அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்கு உள்ளாகி உள்ளனர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், பந்தை சேதப்படுத்தி உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2001 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு இவ்வகை குற்றத்துக்காக மற்றொரு இந்திய வீரர் ராகுல் டிராவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
பாக்., ஆதிக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தான், அதிக அளவில் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்கு உள்ளாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் அரங்கில் இதற்காக முதன் முதலில் தடையை எதிர்கொண்ட வீரர், பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் தான். கடந்த 2000 ல் ஒரு போட்டியில் பங்கேற்க இவருக்கு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அப்ரிதி பந்தை கடித்து சேதப்படுத்தினார். இவர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 சர்வதேச போட்டிகள் தடையை எதிர்கொண்டுள்ளார். 
"ரிவர்ஸ் ஸ்விங்' காரணம்:
பல்வேறு தண்டனைகள், வழங்கப்பட்டு வரும் நிøலியிலும், கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்துதல் தொடர்கிறது. இதற்கு பந்தை "ரிவர்ஸ் ஸ்விங்' செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். இது பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு களங்கமாக அமைந்து உள்ளன. தடை மற்றும் அபராதத்தை அதிகப்படுத்தும் பட்சத்தில், இச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் கட்டுப்படுத்த முடியும். 


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails