பெங்களூரு:காதலர் தினத்தை எதிர்த்து வரும் ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசப்பட்டது.காதலர் தினத்திற்கு, ஸ்ரீராமசேனை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கன்னட "டிவி' சேனல் ஒன்று, காதலர் தினம் எதிர்ப்பு சம்பந்தமாக பெங்களூரு டவுன் ஹாலில் கலந்துரையாடலை நடத்தியது. இதில், ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் பங்கேற்றார்.முத்தாலிக்கின் வருகையை அறிந்த இளைஞர் காங்கிரசார், டவுன் ஹாலுக்கு கூட்டமாகச் சென்றனர். அங்கு முத்தாலிக்கை பிடித்து இழுத்து, அவரது முகத்தில் தார் மற்றும் கறுப்பு பெயின்டை பூசினர். இருந்தாலும், இளைஞர் காங்கிரசார் விடவில்லை. அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளினர்.
இச்சம்பவத்தையறிந்த போலீசார், டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். போலீசார் வருகையை அறிந்ததும் இளைஞர் காங்கிரசார் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்தி, தடியடி நடத்தினர்; சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து முத்தாலிக் கூறுகையில், ""என் முகத்தின் மீது கறுப்பு பெயின்ட் பூசப்பட்டது. இந்து சமயத்திற்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்செயல் ஜனநாயகமல்ல, குண்டாயிசம். நீதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடுவது தான் காங்கிரசிஸின் கலாசாரம். இந்து சமுதாயம் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும்,'' என்றார்.இச்சம்பவம் எதிரொலியாக, தார்வாட் காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசி தாக்கப்பட்டது. நவல்குந்தில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது. பிப்ரவரி 13ம் தேதி, பிஜப்பூர் மாவட்டம் சிந்த்பூரில் பந்த் அனுஷ்டிக்க ஸ்ரீராமசேனை அழைப்பு விடுத்துள்ளது
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment