Friday, February 12, 2010

அணு ஆயுத நாடாகி விட்டோம்: ஈரான் குதூகலம்

 அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு, தனது நாடான்ஸ் அணு சக்தி நிலையத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது ஈரான்.



முதல்கட்டமாக 20 விழுக்காடு வரையிலான தூய்மையான யுரேனிய செறிவூட்டலை செய்துள்ள ஈரான், சுமார் 80 விழுக்காடு வரை யுரேனிய செறிவூட்டலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தனது இந்த யுரேனிய செறிவூட்டல், அணு மின் உற்பத்தி நிலையங்களுக்காகத்தான் என்று ஈரான் கூறி வருகிற போதிலும், இந்த யுரேனிய செறிவூட்டல் மூலம் அணு ஆயுதங்களையும் அது தயாரிக்க முடியும்.


இந்நிலையில் ஈரான், இஸ்லாமிய குடியரசு நாடாக உருவாவதற்கு வழி வகுத்த புரட்சி நடந்த 31 ஆவது ஆண்டு கொண்டாட்டம், இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


தலைநகர் தெஹ்ரானில் உள்ள சதுக்கத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் அகமதுனிஜாத், முதல் கட்ட யுரேனிய செறிவூட்டலை முடித்துள்ளதன் மூலம் ஈரான் தற்போது அணு சக்தி (ஆயுத) நாடாகிவிட்டது என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.


அவரது இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் உற்சாக குரல் எழுப்பினர். 
 
 
source:tamilulakam
 

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails