Sunday, February 14, 2010

யூதர்களை கொலை செய்த டாக்டர் டைரி ஏலம்


 
 லண்டன்:சித்திரவதை முகாம் களில் யூதர்களை விதவிதமாகக் கொலை செய்த டாக்டரின் டைரி விரைவில் ஏலத்துக்கு வருகிறது.இதுகுறித்து, லண்டனிலிருந்து வெளிவரும் "திடெலிகிராப்' பத்திரிகை கூறியிருப்பதாவது:டாக்டர் ஜோசப் மெங் கெலே என்பவர் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில், "மரண தேவன்' என்று போற்றப் பட்டவர். சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருந்த யூதர்களை விதவிதமாகக் கொல்ல ஹிட்லருக்கு வழிவகை வகுத்துக் கொடுத்தவர்.


1979 வரை வாழ்ந்த இவரது டைரிகள் பிரேசிலில் போலீஸ் ஆவணங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1960 ல் அந்த டைரி தொடங்குகிறது.இவர் தனது டைரியில், "மனித இனத்தை விருத்தி செய்யும் வழிவகைகளைப் பின்பற்றாவிடில், வெகு சீக்கிரத்தில் மனித இனமே அழிந்து விடக் கூடும்' என்று கவலைப்பட்டு எழுதியுள்ளார். அமெரிக்காவில் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த டைரி விரைவில் ஏலத்துக்கு வரவிருக்கிறது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails