லண்டன் : மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் நுரையீரல் மனிதனுக்கு பொருந்தும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மற்றும் ஆல்பிரட் மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பன்றி நுரையீரலை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பான முதல் சோதனை தோல்வி அடைந்தது.
பிறகு மனித மரபணு சேர்க்கப்பட்ட புதிய பன்றியை உருவாக்கி வளர்த்தனர். மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரலை அகற்றி மெஷினில் பொருத்தி ஆல்பிரட் மருத்துவ மனையில் சோதனை நடத்தினர். அச்சோதனையில் மனித உடலுக்கு வெளியே மனித ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை பன்றியின் நுரையீரல் சிறப்பாக நிறைவேற்றி உள்ளது.
இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கும் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டால் மனித உடலில் பன்றி நுரையீரலை வெற்றிகரமாகப் பொருத்தி இயக்கலாம் என ஆல்பிரட் மருத்துவ மனையின் டாக்டர் கிளென் வெஸ்டால் கூறினார். இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகலாம் என அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு ஆராய்ச்சிப் பணிகளில் இது மகத்தான முன்னேற்றம் ஆகும் என வெஸ்டால் குறிப்பிட்டார். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி அடையும் சமயத்தில் விஞ்ஞானிகள் சிலர் இந்த முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
source:dinakaran
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment