Monday, February 15, 2010

இலங்கை தூதுவரை அழைத்து ரொபேட் ஓ பிளேக் கடும் கண்டனம்

     

 

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் அமெரிக்கா பிரஜையுமான சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் தனது நாட்டிலுள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க, பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கைக்கு அமெரிக்கா நிதி வழங்கியதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் தனது கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமவை இராஜாங்க திணைக்களத்துக்கு அழைத்த அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியத்துக்கான உதவி செயலர் ரொபேர்ட் ஓ ப்ளேக், மேற்குறித்த இரு விடயங்கள் தொடர்பாகவும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கா தூதரகம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளபோதிலும், சிறிலங்கா தூதுவர் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவும் நோர்வேயும் பொன்சேகாவுக்கு நிதி வழங்கி மகிந்த அரசை கவிழ்ப்பதற்கு சதி அமைத்தன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் அண்மையில் பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


source:athirvu


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails